தைலமரக் காட்டுக்குள், பலத்த காயங்களுடன் கிடந்த 13 வயது சிறுமி! மனிதமிருகங்களால் நேர்ந்த கொடூரம்!
13 year child sexually abused in kandarvakottai

கந்தர்வகோட்டை அருகே நொடியூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. அவர் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது கிராமத்திற்கு அருகிலுள்ள பாப்பான்குளம் என்ற பகுதியில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றுள்ளார்.
அப்போது மர்மநபர்கள் சிலர் சிறுமியை அப்பகுதியிலிருந்து 1கி.மீ தொலைவிலுள்ள தைல மரக்காட்டிற்கு தூக்கி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சிறுமி தைலமரக்காட்டில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடந்துள்ளார். இந்நிலையில் அவ்வழியாக சென்ற சிலர் சிறுமியை பார்த்து அதிர்ச்சி அடைந்து, உடனே சிறுமியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த அவர்கள் அவர்கள் கதறிக்கொண்டே சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வழக்குபதிவு செய்து அந்த காமக் கொடூரர்கள் யார் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.