×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிர்ச்சி தகவல்: தமிழகத்தில் 10,000 பேர் பாம்பு கடியால் உயிர் இழக்கும் சோகம்!

10 thousands people die in tamilnadu for snake bite per year

Advertisement

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். அதற்கு முக்கிய காரணம் பாம்பின் கொடூர விஷமும், அது கடித்தால் உயிர் போய்விடும் என்ற பயமும்தான் காரணம். என்னதான் தொழில்நுட்பம், மருத்துவம் வளர்ந்திருந்தாலும் பல நேரங்களில் பாம்பு கடியால் உயிர் இழப்புகள் ஏற்படத்தான் செய்கின்றன.

இந்நிலையில் இங்கிலாந்து பல்கலைக் கழக உதவி பேராசிரியரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளருமான சக்திவேல் வையாபுரி இன்று கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது ஒரு அதிர்ச்சி தகவல் கூறியுள்ளார். அதாவது, தமிழகத்தில் மட்டும் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் பாம்புக் கடியால் உயிரிழப்பதாக அவர் கூறியுள்ளார்.

போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால்தான் பாம்புக்கடியால் ஏற்படும் உயிரிழப்பு அதிகரித்துள்ளதாக கூறும் அவர்,  எந்த வகையான பாம்பு கடித்தது என்பதை கண்டறிவதற்கான கருவி தயாரிக்கும் ஆராய்ச்சி நடந்து வருவதாகவும், ஒரு சொட்டு இரத்தத்தை அதில் வைத்தால் எந்த வகையான பாம்பு கடித்தது என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்றாற்போல் சிகிச்சை வழங்கி உயிரை காப்பாற்ற முடியும் எனவும் கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#snake #Snake bite
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story