சாக வேண்டிய வயாதா இது!! 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை..!! பதறவைக்கும் காரணம்..
10 ஆம் வகுப்பில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம்

10 ஆம் வகுப்பில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஆவாரம்பாளையம் ராமசாமி லே-அவுட்டை சேர்ந்தவர் மருதுபாண்டி. இவரது 15 வாக்குகள் சித்தா புதூரில் உள்ள பள்ளி ஒன்றில் 10 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இந்நிலையில் தனது பள்ளிக்கு சென்று தனது 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை வாங்கிவருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு மாணவி பள்ளிக்கு சென்றுள்ளார்.
பள்ளியில் கொடுத்த மதிப்பெண் பட்டியலை பார்த்த போது 500-க்கு 180 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்து இருந்தார். இதனால் அவர் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார். வீட்டிற்கு வந்தபிறகு இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். குறைவான மதிப்பெண் எடுத்ததால் சக மாணவிகள் தன்னை கிண்டல் செய்வார்கள் என அழுது புலம்பிய அவருக்கு அவரது பெற்றோர் சமாதானம் கூறியுள்ளனர்.
ஆனால் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாத அவர், தற்கொலை செய்ய முடிவு செய்து வீட்டில் உள்ள குளியல் அறைக்கு சென்று, அங்கு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். குளியறையில் இருந்து மகள் நீண்டநேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை தட்டியுள்ளனர்.
ஆனால் எந்த பதிலும் இல்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மகள் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து பெற்றோர் கதறி துடித்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டநிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.