×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

புதிய வண்டியின் டயருக்கு அடியில் எலுமிச்சை வைப்பது ஏன்?.. ஒரு யூஸும் இல்ல, ஒரு எலுமிச்சை தான் லாஸ்.!

புதிய வண்டியின் டயருக்கு அடியில் எலுமிச்சை வைப்பது ஏன்?.. ஒரு யூஸும் இல்ல, ஒரு எலுமிச்சை தான் லாஸ்.!

Advertisement

 

புதிய வாகனம் வாங்கும் அனைவரும் பொதுவாக கோவிலுக்கு சென்று பூஜை செய்வது வழக்கமான ஒன்றாகும். இதனை அடுத்து வாகனத்தின் சக்கரத்தின் அடியில் எலுமிச்சை பழத்தினை வைத்து, அதனை வாகன சக்கரத்தால் நசித்து வாகனம் ஓட்டுவர். இதனால் எவ்வித பயனும் ஏற்படாது. ஒரு எலுமிச்சை தான் வீணாகும்.

முன்பெல்லாம் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி, பொதி சுமக்கும் கழுதை போன்றவையே போக்குவரத்துக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டது. போக்குவரத்துக்கு கால்நடைகளை பயன்படுத்துவதால் அவற்றின் கால்களில் கல்லோ அல்லது முற்களோ குத்தி காயங்கள், கிருமிகள் பெருகி சரியாகாத நிலை ஏற்படும். 

மேலும் குதிரைகள் மற்றும் மாடுகள் சேறு, சகதி ஆகியவற்றில் பயணிக்க வேண்டிய நிலை இருந்ததால், பாக்டீரியா உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படும். மருத்துவ வளர்ச்சியற்ற காலத்தில் நமது முன்னோர்கள் எலுமிச்சை ஒரு இயற்கை ஆன்டிபயாடிக் என்பதை உணர்ந்து காயத்தில் உள்ள கிருமிகளை அழித்து குணப்படுத்துவதற்காக எலுமிச்சை பயன்படுத்தினர். 

இதற்காகவே வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மாடுகள் மற்றும் குதிரைகளை வாரம் ஒருமுறை எலுமிச்சை பழத்தை மிதிக்க வைத்தார்கள். இதன் காரணமாக கண்ணுக்கு தெரியாத காயங்களும் குணமடையும். வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள குதிரைகள் மற்றும் மாடுகளின் கால்கள் வலுவாக இருந்தால் மட்டுமே போக்குவரத்துக்கு அவற்றை பயன்படுத்த முடியும் என்பதால் எலுமிச்சை பழத்தை மிதிக்க வைக்கும் வழக்கம் இருந்தது. 

ஆனால் தற்போதைய நவீன காலகட்டத்தில் அறிவியல் ரீதியான உண்மை தெரியாமல் பலரும் எலுமிச்சை பழத்தினை சக்கரங்களுக்கு அடியில் வைத்து அதன் பின் வண்டியை ஓட்டுவதை வழக்கமாக வைத்துள்ளோம். ஆனால் அதனால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vehicle tyre #Latest news #sprituality #ஆன்மிகம் #எலுமிச்சை #lemon #வாகனம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story