×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அசைவ உணவை பிரசாதமாக வழங்கும் சிவன் கோயில்.. எங்கு உள்ளது தெரியுமா.!?

அசைவ உணவை பிரசாதமாக வழங்கும் சிவன் கோயில்.. எங்கு உள்ளது தெரியுமா.!?

Advertisement

கேரள கோயிலின் வரலாறு​​​

பொதுவாக இந்தியாவில் பல்வேறு கோயில்கள் உள்ளன. இவ்வாறு கோயில்களில்  கடவுளுக்கு படைத்து பக்தர்களுக்கு வழங்கப்படுவது தான் பிரசாதம். இவ்வாறு வழங்கப்படும் பிரசாதம் பெரும்பாலும் சைவ வகையை சார்ந்தவையாகவே இருக்கும். ஆனால் அசைவ உணவை பிரசாதமாக வழங்கும் சிவன் கோயிலை குறித்து கேள்வி பட்டுள்ளீர்களா? 

எங்கு அமைந்துள்ளது ?

ஆம் கேரள மாநிலத்தில் வலப்பட்டணம் என்ற ஆற்றங்கரையின் ஓரத்தில் பரசினிகடவு என்ற ஊர் அமைந்துள்ளது. இந்த ஊரில் பரசினி மடப்புரா  ஶ்ரீ முத்தப்பா என்ற சிவ கோயில் மிகவும் பிரசித்து பெற்றதாக அங்குள்ள பக்தர்கள் கருதி வருகின்றனர். சிவபெருமானின் அவதாரமாக கருதப்படும் முத்தப்பா ஆலயத்தில் வித்தியாசமான சடங்குகளும் பிரசாதங்களும் வழங்கப்படுகிறது. 

அசைவ உணவு பிரசாதம்

இதில் குறிப்பாக இறைச்சி, சுட்ட மீன் மற்றும் கள்ளு தான் இக்கோயிலில் மிக முக்கியமான, தனித்துவமான பிரசாதமாக கடவுளுக்கு படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்குகின்றன. மேலும் சிவபெருமானின் அவதாரமாக கருதப்படும் முத்தப்பா என்பவர் சைவ குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் அவர் அசைவ உணவு சாப்பிட்டதால் குடும்பத்தை விட்டு விலக்கி வைத்ததாக கூறப்படுகிறது. 

பின்னர் காலப்போக்கில் கருணையுள்ள தெய்வமாக அந்த ஊர் மக்கள் கருதி வந்தனர். பின்னர் இவருக்கு ஆலயம் அமைக்கப்பட்டு சிவனின் அம்சமாக கருதப்படும் முத்தப்பாவின் விருப்ப உணவான மீன், கள்ளு போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#temple #history #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story