எங்க அப்பா மேல எப்படி கை வைக்கலாம்..! அதுக்கு தான் இது... தோசைக் கடைக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கிய 2 பெண்கள்! பகீர் சம்பவம்..!!!
வாரணாசியில் தோசைக் கடைக்குள் புகுந்து இரண்டு இளம்பெண்கள் அடுப்பு, தவா உள்ளிட்ட பொருட்களை உடைத்து ரகளையில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள தோசைக் கடைக்குள் புகுந்த இரண்டு இளம்பெண்கள், அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். நவம்பர் 14-ம் தேதி இரவு நடந்த இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்கூட்டியில் வந்த பெண்கள் திடீர் ரகளை
வாரணாசியின் பேலுபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துளசிபூர் பகுதியில் பால் முகுந்த் பாண்டே என்பவர் தோசைக் கடை நடத்தி வருகிறார். கடந்த நவம்பர் 14-ம் தேதி இரவு சுமார் 8 மணியளவில், கருப்பு நிற ஸ்கூட்டியில் இரண்டு இளம்பெண்கள் அங்கு வந்துள்ளனர். கடை மற்றும் அதன் சுற்றுப்புறத்தை செல்போனில் வீடியோ எடுத்த அவர்கள், திடீரெனக் கடைக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: விடுதி அறை வாசலில் திடீரென சுருண்டு விழுந்த புதுமணப் பெண்! அடுத்த 5 வினாடிகளில் நடந்த பயங்கரம்... நடந்தது என்ன? பகீர் சம்பவம்..!!!
கடைக்குள் இருந்த தோசை சுடும் அடுப்பு, தவா உள்ளிட்ட பொருட்களைத் தூக்கி வீசியதுடன், அங்கிருந்த மற்ற பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தினர். இதனால் அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண்கள் உள்ளிட்ட வாடிக்கையாளர்கள் பயந்து வெளியே ஓடினர். அவர்களைத் தடுக்க முயன்ற பெண் ஒருவருடனும் இளம்பெண்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்குக் காயம்
ரகளையைத் தட்டிக்கேட்ட கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அங்கிருந்த பொருட்களை வீசி தாக்கியதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஊழியர்கள் மற்றும் சில வாடிக்கையாளர்களுக்குக் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், கடையின் கல்லாப் பெட்டியில் இருந்த பணத்தை எடுக்க முயன்றதுடன், கொலை மிரட்டலும் விடுத்ததாக உரிமையாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
தந்தையைத் தாக்கியதற்கு நியாயம் கேட்க வந்த பெண்கள்
இதற்கிடையே, தங்களது தந்தையைத் தாக்கியதற்கு நியாயம் கேட்கவே கடைக்கு வந்ததாக அந்தப் பெண்கள் பேசுவது சிசிடிவி ஆடியோவில் பதிவாகியுள்ளது. இதனால், கடையில் ஏற்பட்ட மோதலுக்கான பின்னணி குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: பூஜைக்கு செய்த பிரசாதத்தை சாப்பிட்ட 4 வயது சிறுமி! ஆத்திரத்தில் மகளை அடித்தே கொன்ற தாய்... கதறும் தந்தை! நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!!!