×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உலகப் புகழ்பெற்ற உத்திரகோசமங்கை மரகத நடராஜர் சிலையை திருட முயற்சி! காவலாளியை தாக்கிய திருடர்கள்

uthirakosamangai maragatha statue robbery attempt

Advertisement

ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் உள்ளது உத்திரகோசமங்கை என்ற பாடல் பெற்ற ஸ்தலம். மாணிக்கவாசகர் அதிக நாள் இந்த ஆலயத்தில் தங்கி இருந்ததாக குறிப்புகள் கூறுகின்றன.

ஆரூதரா தரிசனத்தன்று மட்டுமே நடராஜரை மரகத கோலத்தில் தரிசிக்கமுடியும். மற்ற நாட்களில் சந்தனகாப்பு சார்த்தபட்டிருக்கும். ஆரூதரா தரிசனம் முடிந்த அடுத்த நாள் மீண்டும் சந்தன காப்பு சார்த்தப்பட்டு அடுத்த ஆண்டு ஆரூதரா தரிசனத்தன்று மட்டுமே களையப்படும். சுவாமிக்கு மங்களநாதர் என்றும் பெயர். இங்கு நடராஜர் சிலை மரகதத்தில் உள்ளது. இந்த நடராஜர் தான் ஆதி நடராஜர் என்றும் சொல்லப்படுகிறது.

இறைவன் உமையவள் மட்டும் காணுமாறு நடனம் ஆடியது உத்திகோசமங்கையில் மட்டுமே. 

ஐந்தரை அடி உயரமுள்ள மரகத நடராஜர் சிரித்த முகமாய் இருக்கிறார். எப்பவும் சந்தனம் பூசப்பட்டு இருந்ததால் தான் ஆங்கிலேயர்கள் அது மரகதம் என்று தெரியாமல் தங்கள் ஊருக்கு கடத்தாமல் இருந்தார்கள் போலும்.  உலகத்திலேயே பெரிய மரகத கல் இதுவாக தான் இருக்கும் என கருதப்படுகிறது. இராவணன் மனைவி மண்டோதரி இங்கு வந்து வழிபட்டதாய் சொல்கிறார்கள். இந்த நடராசர் சிலை உத்திர கோசமங்கையின் தனிப்பெரும் சொத்து.

இத்தகைய சிறப்புமிக்க உத்திரகோசமங்கை கோவிலில் உள்ள மரகத நடராஜர் விக்கிரகத்தை திருட முயற்சி நடந்ததுள்ளதாக பாரதீய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் எச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

எச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், "உத்திரகோசமங்கை கோவிலில் உள்ள மரகத நடராஜர் விக்கிரகத்தை திருட முயற்சி நடந்ததுள்ளது. சத்தம் எழுப்பியதால் காவலாளியை தாக்கிவிட்டு திருடர்கள் ஓட்டம். தொடர்ந்து பக்தர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கக் கோரியும் அறநிலையத்துறை செய்யவில்லை. அறநிலையத்துறையின் மெத்தனம் கண்டிக்கத்தக்கது" என்று பதிவிட்டுள்ளார். 



 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#uthirakosamangai maragatha statue robbery attempt #uthirakosamangai #maragatha statue #bjp #hRaja
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story