இடுக்கு பிள்ளையார் கோவிலில் பக்தற்கு நடந்த விபரீதம்! உடல் பருமனால் சிக்கிய இளைஞர்.... மூச்சு திணறி உயிரிழப்பு..!!,
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோயிலில் தரிசனம் செய்ய முயன்ற ஆந்திர பக்தர் உடல்பருமன் காரணமாக சிக்கி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோயிலில் தரிசனம் செய்ய வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் குறுகலான இடுக்கில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் உயிரிழந்தது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாவங்கள் நீங்கும் என்ற நம்பிக்கையுடன் தரிசனம்
ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இடுக்கு பிள்ளையார் கோயில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்யும் முக்கிய திருத்தலங்களில் ஒன்றாகும். கோயிலில் உள்ள குறுகலான இடுக்கு வழியாகச் சென்று சாமி தரிசனம் செய்தால் பாவங்கள் நீங்கும் என்பது நீண்டகாலமாக நிலவி வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: அதிர்ச்சி! காலையில் பள்ளிக்குச் சென்ற 5 வயது சிறுமி திடீரென மயங்கி உயிரிழப்பு! சிவகங்கையில் பெரும் சோகம்!
உடல்பருமன் காரணமாக இடுக்கில் சிக்கிய பக்தர்
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மணிக்குமார் (36) கிரிவலம் மேற்கொண்டு கோயிலுக்கு வந்திருந்தார். அப்போது இடுக்கு வழியாகச் செல்ல முயன்றபோது, உடல்பருமன் காரணமாக வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவருக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
அவரது நிலையை கவனித்த பொதுமக்கள் மற்றும் பிற பக்தர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு மணிக்குமாரை வெளியே கொண்டு வந்தனர். அதன்பின் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் மணிக்குமார் உயிரிழந்தார். தரிசனத்திற்காக வந்த பக்தர் உயிரிழந்த சம்பவம் திருவண்ணாமலைக்கு வந்திருந்த பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இப்படியா நடக்கணும்.... சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தம்பதியர்..! விடாது துரத்திய எமன்... ஆட்டோ பயணத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!