அடேய்.. என்னடா பண்றீங்க...! இது எங்க பணம்! நாங்க என்ன வேணாலும் செய்வோம்! திருச்செந்தூர் கோவிலில் கட்டுக்கட்டாகப் பணத்தைக் கொட்டி கிழித்த 2 பேர்..! அதிர்ச்சி சம்பவம்..!!!!
திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் ஆண், பெண் இருவரும் கட்டுக்கட்டாக இருந்த ரூபாய் நோட்டுகளைக் கிழித்தெறிந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் ஆண் ஒருவரும் நடுத்தர வயதுப் பெண் ஒருவரும் கட்டுக்கட்டாக இருந்த ரூபாய் நோட்டுகளைத் தரையில் கொட்டி கிழித்தெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில் பகுதியில் சுற்றித்திரிந்த இருவரிடம் உள்ளூர் வியாபாரிகள் விசாரித்தபோது, பணம் தொடர்பாக எழுந்த கேள்வியைத் தொடர்ந்து அவர்கள் இவ்வாறு நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
கட்டுக்கட்டாக இருந்த பணத்தை கிழித்தெறிந்த இருவர்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அங்கு ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் தங்களிடம் இருந்த பணத்தைத் தரையில் கொட்டி கிழிக்கத் தொடங்கினர். இதைக் கண்ட அப்பகுதி மக்கள், பணத்தை கிழிக்க வேண்டாம் எனக் கூறி தடுத்ததாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: சற்று முன்.. திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் முதல்வர் விஜய்க்கு 48 மணி நேர கெடு விதித்து... அதிரடியாக பறந்த வக்கீல் நோட்டீஸ்..!!!
ஆனால், அவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ரூபாய் நோட்டுகளை கிழித்ததாக வீடியோவில் பதிவாகியுள்ளது. 'இது எங்கள் பணம், நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம்' என அந்தப் பெண் கூறியபடி பணத்தைச் சிதைத்ததாகவும் காட்சிகள் தெரிவிக்கின்றன.
பணம் குறித்து முரணான கருத்து; இணையத்தில் விவாதம்
உழைத்துச் சம்பாதித்த பணத்தை யாரும் பறிக்க முடியாது என்றும், களவாடிய பணத்தைத்தான் பறிப்பார்கள் என்றும் அந்தப் பெண் பேசியதாக வீடியோவில் கூறப்படுகிறது. அவரது பேச்சும், இருவரும் பணத்தை கிழித்தெறிந்த விதமும் இணையத்தில் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
இந்தச் செயலுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை முழுமையாக விசாரித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.
வீடியோ அடிப்படையில் போலீசார் விசாரணை
கோவில் வளாகத்தில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக வைரலாகும் வீடியோவின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பணத்தை கிழித்தவர்கள் யார், அவர்களிடம் இருந்த பணம் எங்கிருந்து வந்தது, இந்தச் செயலுக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.