×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தோஷம் நீக்கும் திருவோண விரதம்.. ஆன்மீக பக்தர்களே இன்று தவறவிடாதீங்க.!

Thiruvonam Vratam: திருவோணம் விரதம் வாழ்வில் திருப்பம் தரும் வழிபாடு ஆகும்.

Advertisement

வாமன அவதாரத்தை போற்றும் திருநட்சத்திர விரதத்தின் ஆன்மிகப் பலன்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள். 

திருவோண விரதம்:

பெருமாளுக்குரிய முக்கியமான விரதங்களில் ஒன்றாகக் கருதப்படும் திருவோணம் விரதம், ஆன்மிக வளர்ச்சி, செல்வ வளம் மற்றும் வாழ்வில் முன்னேற்றத்தை தரும். ஏகாதசி விரதம் மாதத்தில் இருமுறை கடைப்பிடிக்கப்படுகின்ற நிலையில், திருவோணம் நட்சத்திரம் மாதத்தில் ஒருமுறை மட்டுமே வரும். ஆனால் அதன் மகிமை குறித்து அறிந்தோர் குறைவாக இருப்பதால், சிலர் மட்டுமே இந்த விரதத்தை தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர். வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டு, 16 வகை செல்வங்களுடன் நிறைவான வாழ்வு கிடைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த விரதத்தை மேற்கொள்வது சிறப்பானதாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க: மார்கழி மாத கடைசி அமாவாசை... இன்று மறந்தும் கூட இந்த தவறுகளை செய்யாதீர்கள்!

வாமன அவதாரம்:

திருவோணம் நட்சத்திரம், மகாவிஷ்ணு அவர்களின் வாமன அவதாரத்துடன் தொடர்புடையது. வாமன அவதாரம் எடுத்தது திருவோணம் நாளிலேயே என புராணங்கள் கூறுகின்றன. நட்சத்திரங்களில் “திரு” எனப் பெருமைப்படுத்தப்படும் இரண்டு நட்சத்திரங்களில் ஒன்று பெருமாளுக்குரிய திருவோணம். மற்றொன்று சிவபெருமானுக்குரிய திருவாதிரை. வாமனராகவும், திரிவிக்ரமராகவும் அவதரித்த தினம் திருவோணம் என்பதால், இந்நாள் பெருமாளை வழிபட மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.

ஆன்மீக நம்பிக்கை:

ஏகாதசி விரதத்தைப் போலவே, திருவோணம் நாளிலும் பக்தர்கள் நாள் முழுவதும் விரதம் இருந்து இறைபக்தியில் ஈடுபடுவர். இந்த விரதம் மகிழ்ச்சி, செல்வ வளம், குடும்ப நலன், தொழில் முன்னேற்றம் போன்ற பலன்களை அளிக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், கடந்த கால பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கவும், ஆன்மிக ஞானம் வளரவும், பெருமாளுடன் ஆன்மிக நெருக்கம் உருவாகவும் இந்த விரதம் வழிவகுக்கும். வைகுண்டபதவி மற்றும் பரமபத தரிசன பாக்கியம் கிடைக்கும் என்பதும் இந்த விரதத்தின் முக்கிய ஆன்மிக நம்பிக்கையாகும்.

விரதம் முறை:

திருவோணம் விரத முறையின்படி, அதிகாலையில் எழுந்து நீராடி சுத்தமான உடை அணிந்து, தீர்த்தம், பால், தேன் போன்றவற்றால் அபிஷேகம் செய்து பெருமாளை வழிபட வேண்டும். வாசனைமிகு மலர்களால் அலங்கரித்து, தியானம், மந்திரம் மற்றும் பக்தி பாடல்கள் மூலம் நாள் முழுவதும் இறைநினைவில் இருக்க வேண்டும். உணவைத் தவிர்த்து விரதம் இருந்து, மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு பூஜை செய்து நைவேத்தியம் சமர்ப்பித்து, அதை பிரசாதமாக ஏற்று விரதத்தை நிறைவு செய்வது வழக்கமாகும். ஏகாதசி விரத முறைகளைப் போலவே கட்டுப்பாடுகளுடன் இந்த விரதமும் கடைபிடிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: புண்ணியம் தரும் சர்வ ஏகாதசி விரதம்.. இன்று தவறவிடாதீங்க.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Spiritual Tips #Thiruvonam Vratam #Lord Vishnu Avatar #திருவோணம் விரதம் #ஆன்மிகம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story