சந்திர கிரகணத்தின் போது இதை செய்தால் பல மடங்கு புண்ணியம்! அந்த நேரத்தில் கோவில்கள் மூடப்படுவது ஏன் தெரியுமா?
செப்டம்பர் 7 அன்று இரவு முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. கோவில்கள் மூடப்படும் காரணமும், கிரகண காலத்தின் ஆன்மீக முக்கியத்துவமும் விரிவாக அறியலாம்.
இயற்கையில் நிகழும் வானியல் அதிசயங்களில் கிரகணம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது ஒரு வானியல் நிகழ்வு மட்டுமல்லாது, ஆன்மீக அர்த்தத்தையும் தாங்கி நிற்கிறது. வரும் சந்திர கிரகணம் அதற்கு சிறந்த உதாரணமாகும்.
செப்டம்பர் 7 சந்திர கிரகணம்
இந்த ஆண்டு செப்டம்பர் 7, ஞாயிற்றுக்கிழமை இரவு 9:56 மணிக்கு முழு சந்திர கிரகணம் துவங்கி, அதிகாலை 1:26 மணி வரை நீடிக்கிறது. இந்த நேரத்தில் பல கோவில்கள் மூடப்படும். இதற்கான காரணம் பல்வேறு கருத்துக்களுடன் சொல்லப்பட்டாலும், உண்மையில் பூஜைகள் மற்றும் வழிப்பாடுகள் நிறுத்தப்படுவதில்லை.
கோவில்கள் ஏன் மூடப்படுகின்றன?
கிரகண நேரங்களில் சிலர் தீய சக்திகளின் தாக்கம் அதிகரிக்கும் என்று நம்புகின்றனர். ஆனால், அது உண்மை அல்ல. உண்மையான காரணம், கோவில்களில் நடக்கும் விசேஷ பூஜைகள் இடையூறு இல்லாமல் நடைபெற வேண்டும் என்பதற்காக மக்களை உள்ளே அனுமதிக்காமல் இருப்பதே. திருவண்ணாமலை போன்ற புனிதத் தலங்களில் கிரகணக் காலங்களில் தீர்த்தவாரி மற்றும் உபராக பூஜைகள் நடத்தப்படுகின்றன.
இதையும் படிங்க: முக்கிய பதிவு : பெண்கள் பழைய தாலி கயிறை மாற்ற சரியான நேரம் எது? எங்கு மாற்றனும் தெரியுமா? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.....
புண்ணிய காலத்தின் முக்கியத்துவம்
கிரகண நேரத்தை ‘புண்ணிய காலம்’ என்று அழைக்கின்றனர். இந்த நேரத்தில் செய்யப்படும் தான தர்மங்கள் பல மடங்கு புண்ணிய பலன்களை தரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. வீட்டிலிருந்தே இறைவனை வழிபட்டு, அவரது நாமத்தை உச்சரிப்பதனால் கூட நல்ல பலன்கள் கிடைக்கும். இரவு நேரத்தில் நடைபெறும் சந்திர கிரகணத்தின் காரணமாக, தானத்திற்கான பொருட்களை அடுத்த நாள் வழங்கலாம்.
கிரகண சமய நடைமுறைகள்
கிரகணம் முடிந்ததும் குளித்து சுத்தம் செய்வது அவசியம். கிரகண நேரத்தில் ஜன்னல், கதவுகளை மூடி வைப்பது நல்லது. கர்ப்பிணி பெண்கள் வெளியே செல்லக் கூடாது. அதேபோல், இந்த நேரத்தில் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்; கிரகணம் முடிந்ததும் குளித்துவிட்டு உணவு உண்ணலாம் என கூறப்படுகிறது.
செப்டம்பர் 7 அன்று நிகழும் சந்திர கிரகணம், வானியல் அற்புதம் மட்டுமல்லாது, ஆன்மீக புண்ணியத்தைப் பெற்றுத்தரும் சிறப்பு தருணமாகவும் கருதப்படுகிறது. மக்கள் அனைவரும் இந்த சந்தர்ப்பத்தை எச்சரிக்கையுடன், ஆன்மிக நம்பிக்கையுடன் அணுக வேண்டும்.
இதையும் படிங்க: ஆடி மாத சிவராத்திரியில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு கஜகேசரி யோகம் ! ஜூலை 23 அன்று அதிஷ்டம் பெரும் மூன்று ராசியினர்கள்!