×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சனிப்பெயர்ச்சி.. இந்த ராசிக்காரர் ரொம்ப கவனம்.. மீறினால் விரயம் தான்.!

SaniPeyarchi 2026 March: சனிபகவான் கும்பராசிக்கு இடம்பெயர்ந்தார்.

Advertisement

மேஷராசிக்காரர்கள் சனியின் தாக்கத்தை குறைக்க சிவனை வழிபடலாம்.

ஏழரைச்சனி முதல்கட்டம்:

Sanipeyarchi Mesham 2026: நவக்கிரகங்களில் மெதுவாக நகரக்கூடிய கிரகம் சனிபகவான். ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் தங்கி பலன்களை வழங்கும் சனிபகவான், வாழ்க்கையில் ஆசிரியரை போல பாடங்கள் பயிற்றுவிப்பவர் ஆவார். இவர் மார்ச் 6, 2026 முதல் கும்பராசியில் இருந்து மீனராசிக்கு இடம்பெயர்கிறார். இதனால் மேஷ ராசியில் அஸ்வதி, பரணி, கிருத்திகை 1ம் பாத அம்சம் கொண்டவர்களுக்கு ஏழரைச் சனியின் முதல் கட்டம் ஆகும். 

இதையும் படிங்க: 2026ல் 4 ராசிகளுக்கு பொற்காலம்.. சனி பகவான் அருளால் செல்வம் கொட்டும்.!

இழந்த சொத்துக்கள் கிடைக்கும்:

சனி பகவான் மேஷ ராசிக்கு 12ம் இடத்தில், விரய சின்னத்தில் வருவதால் செலவுகள் என்பது இருக்கும். அலைச்சலும் ஏற்படலாம். ஆயுள் காரகன் என்பதால், உடல்நலக்குறைவுகளும் ஏற்படலாம். கையில் இருக்கும் பணம் வீணாக செலவாவதை தடுக்க வீடு கட்டுதல், நிலம் வாங்குதல் என சுபகாரியங்களுக்கு செலவிடுவது நல்லது. நீண்ட நாட்களாக பிரிந்த குடும்பம் ஒன்று சேரலாம். மனவருத்தங்கள் நீங்கி பேச்சுவார்த்தை தொடங்க ஏற்ற காலம். இழந்த சொத்துக்கள், பொருட்கள் மீண்டும் கிடைக்க வாய்ப்புகள் உண்டு.

இலாபம் இருக்கும்:

மேஷ ராசிக்காரர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் நேர்மையுடன், முன்கோபத்துடன் இருப்பதால் சனிப்பெயர்ச்சி காலத்தில் பகைமையை வளர்க்க வாய்ப்புகள் அதிகம். இந்த பகைமை நேர்மையாக இருந்து பிறரின் தவறுகளை சுட்டிக்காட்ட காரணமாக அமையும். அதனால் கவனமாக இருப்பது பகைமையை குறைக்க உதவும். பெண்கள் பிடிவாதத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். ரியல் எஸ்டேட், மருத்துவம், சுகாதாரம், ஆராய்ச்சித்துறை, உணவு தொழில்கள், விஞ்ஞானிகள், தொல்லியல்துறை ஆய்வாளர்கள், நெடுஞ்சாலைத்துறை, கட்டுமான பணியாளர்களுக்கு சனிப்பெயர்ச்சி யோகத்தை அள்ளித்தரும். மாணவர்கள், கலைஞர்கள், அரசியல்வாதிகளுக்கு 90% லாபமும், சுயதொழில் செய்வோருக்கு 80% லாபமும் தரும்.

சனிபகவானின் தீவிரத்தை குறைக்க சிவனை வழிபாடு செய்யலாம். சொந்த ஜாதகத்தை பார்த்தும் அதற்கேற்ப பரிகாரம் செய்யலாம். எந்த பரிகாரம் செய்தாலும் சனி பகவான் வாழ்க்கையை கற்றுக்கொடுப்பவர் என்பதால், ஒருசில ஏற்ற-இறக்கங்களை சந்தித்தாகத்தான் வேண்டும். அதுவே வாழ்க்கையில் நம்மை ஆகச்சிறந்த நபராகவும், உலகை கற்றுக்கொள்ளும் மனிதராகவும் மாற்றும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
 

இதையும் படிங்க: Sevvai Peyarchi: இந்த 3 ராசிகளுக்கு நல்லகாலம் பிறக்குது.. இடம்பெயரும் செவ்வாய்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Spiritual Tips #ஆன்மிகம் #Sanipeyarchi #சனிப்பெயர்ச்சி மேஷம் #2026
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story