×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்த 5 ராசிக்கும் 2026-ல் அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும்.. பஞ்ச கிரக யோகத்தின் பலன்.!

இந்த 5 ராசிக்கும் 2026-ல் அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும்.. பஞ்ச கிரக யோகத்தின் பலன்.!

Advertisement

வரும் 2026 பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில் செவ்வாய், சூரியன், சுக்கிரன், புதன், ராகு உள்ளிட்ட 5 கிரகங்கள் கும்ப ராசியில் இணைய இருக்கின்றன. இந்த பஞ்சகிரக யோகத்தின் காரணமாக, 12 ராசிகளின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட போகிறது. அதிலும், குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை இந்த பஞ்ச கிரக யோகம் கொடுக்கவுள்ளது. 

கும்ப ராசி :

கும்ப ராசியின் முதல் வீடான ஜென்ம ராசியிலேயே இதன் சேர்க்கை நிகழ்கிறது. எனவே, கும்ப ராசிக்காரர்களுக்கு நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். இதுவரை குழப்பத்தில் இருந்த அவர்கள் தெளிவு நிலைக்கு வருவார்கள். மேலும், புதிய சிந்தனைகள் உருவாகக்கூடிய காலம் வரும். சுக்கிரனும், ராகுவும் இணைவதால் வசதி, வாய்ப்புகள், ஆடம்பர பொருட்கள் வந்து சேரும். புதிய வீடு, தங்கம் உள்ளிட்டவற்றை வாங்கக்கூடிய யோகம் ஏற்படும். 

இதையும் படிங்க: 2026ல் 4 ராசிகளுக்கு பொற்காலம்.. சனி பகவான் அருளால் செல்வம் கொட்டும்.!

தனுசு ராசி :

தனுசு ராசிக்கு அனைத்து முயற்சியும் வெற்றியில் முடியும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு அதிகரிக்கும். நிலுவையில் இருந்த பல்வேறு விஷயங்கள் விரைவில் தீர்வுக்கு வரும். இதுவரை படிப்பில் மந்தமாக இருந்தவர்கள், தற்போது சிறந்து விளங்கக்கூடிய ஆற்றலை பெறுவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திடீர் ஆதாயங்கள் மற்றும் பண வரவுகளும் ஏற்படும்.

மிதுன ராசி :

இந்த பஞ்சகிரக யோகத்தின் காரணமாக மிதுன ராசிக்கு பாக்கியஸ்தானத்தில் அதிர்ஷ்டம் ஏற்படுகிறது. இதுவரை தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் கைகூடும். மேலும், வெளிநாட்டிற்கு செல்ல முயற்சிப்பவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். உயர் கல்வி பயில விரும்பபவர்களுக்கு சிறந்த முன்னேற்றம் ஏற்படும். இதுவரை குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவு தீரும். 

ரிஷப ராசி :

ரிஷப ராசிக்கு பத்தாம் வீட்டில் பஞ்ச கிரக யோகம் நடக்க உள்ளது அரசு வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு தற்போது நல்ல செய்தி கிடைக்கும் வேலையில் ஊதிய உயர்வு கிடைக்கும் சமூகத்தில் உங்களின் மரியாதை உயரும் புதிய பொறுப்புகள் தேடி வரும் சிறிய தொழில் நடத்தி வந்தவர்கள் விரிவான தொழிலை நடத்த ஆரம்பிப்பார்கள் வங்கி கடனுக்காக காத்திருந்தால் விரைவில் அது கிடைக்கும். 

மேஷ ராசி:

மேஷ ராசிக்கு எதிர்ப்பாராத பணம் வரவுகள் உண்டாகும் நீண்ட நாட்களாக இருந்து வந்த நிலுவைத் தொகை தற்போது கைக்கு வரும் முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தை தரும் நீண்டகால கனவுகள் பலவும் நிறைவேறக்கூடிய காலம் நெருங்கி வருகின்றது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#2026 #Rasipalan #2026rasipalan
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story