தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பல்லி தலையில் விழுந்தால் ஆபத்தா! அதுவும் யாருக்கு தெரியுமா? முழு விபரம் உள்ளே...

பல்லி தலையில் விழுந்தால் ஆபத்தா! அதுவும் யாருக்கு தெரியுமா? முழு விபரம் உள்ளே...

palli-vizhum-sagunum-body-part-meaning Advertisement

பழைய காலங்களிலிருந்தே நாம் பல்லியின் செயல்களில் பல சகுனங்களை இணைத்து நம்பிக்கை வைத்துள்ளோம். குறிப்பாக வீட்டில் நல்ல காரியம் பற்றிப் பேசும் போது பல்லி சத்தம் கேட்டால், அது நல்ல சகுனமாகக் கருதப்படுகிறது. ஆனால், அந்த பல்லி ஒருவரின் உடலில் விழுந்தால் அதற்கு ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு விதமான பலன்கள் கூறப்படுகின்றன.

இதை மையமாகக் கொண்டு தமிழ் சினிமாவிலும் ஒரு படமாக உருவாக்கப்பட்டது. அதில், பல்லி ஆண்-பெண் மீது விழும் வேறுபாடு மற்றும் அதன் விளைவுகள் சுவாரஸ்யமாக சித்தரிக்கப்பட்டிருந்தன.

இப்போது, உடலில் எந்த பகுதியில் பல்லி விழுந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.

பல்லி பஞ்சாங்கம் – உடல் உறுப்புகளின்படி விளக்கம்

தலை – பெண் மீது விழுந்தால் உயிருக்கு ஆபத்து.

இடது கண் – ஆண் காதலிப்பார், பெண் ஆசைப்படுவார்.

வலது கண் – மன அழுத்தம் வரும்.

வலது கன்னம் – ஆண் குழந்தை பிறக்கும்.

வலது காது – பொருளாதார லாபம்.

மேல் உதடு – சிக்கல்கள் ஏற்படும்.

கீழ் உதடு – புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

இரண்டு உதடுகளும் – உடனடி பிரச்சினை.

முதுகு – உயிரிழப்புச் செய்தி கேட்க வாய்ப்பு.

நகம் – சச்சரவு ஏற்படும்.

கைகள் – பொருளாதார பலன்.

இடது கை – மன அழுத்தம்.

விரல்கள் – நகை வாங்க வாய்ப்பு.

வலது கை – காதல் உறவில் இன்பம்.

தோள்பட்டை – நகை கிடைக்கும்.

தொடை – மகிழ்ச்சியான செய்தி.

கால் மூட்டு – யாராவது பிரியம் காட்டுவர்.

கணுக்கால் – வீண் வம்பு ஏற்படும்.

கெண்டைக்கால் – விருந்தாளிகள் வீட்டிற்கு வருவர்.

வலது கால் – தோல்வி ஏற்படும்.

கால்விரல்கள் – ஆண் குழந்தை பிறக்கும்.

இந்த நம்பிக்கைகள் பழமையான சாஸ்திரங்கள் மற்றும் நமது மூதாதையர் அனுபவங்களை மையமாகக் கொண்டு உருவானவை. நவீன விஞ்ஞானத்தில் இவை நேரடி ஆதாரங்களால் ஆதரிக்கப்படவில்லை என்றாலும், பலர் இன்னும் இவற்றைப் பின்பற்றி வருகின்றன.

இதையும் படிங்க: 12 ஆண்டுகள் கழித்து வரும் அபூர்வ குரு ஆதித்ய ராஜயோகம்! இந்த யோகத்தை அனுபவிக்கும் 3 அதிஷ்ட ராசியினர்! முழு விபரம் உள்ளே.....

 

 

இதையும் படிங்க: இன்றைய தினம் இந்த ராசிகாரர்களுக்கு மட்டும் நினைத்தது நடக்குமாம்! முழு விபரம் உள்ளே....

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Palli Panchangam #Palli sagunam
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story