×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

14 நாட்கள் உயிர் போராட்டம்... பள்ளத்தில் தேங்கியிருந்த களிமண் தண்ணீரை குடித்து உயிரைக் காப்பாத்தி ஆசிரியர்! ஆடு மேய்பவரால் நடந்த அதிசயம்..!!!

ஒடிசாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பள்ளத்தில் விழுந்த ஆசிரியர் மோகன் மகாராணா, 14 நாட்களாகக் களிமண் கலந்த நீரைக் குடித்து உயிர் பிழைத்துள்ளார். ஆடு மேய்ப்பவர் கொடுத்த தகவலால் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement

ஒடிசாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவின்போது ஆழமான பள்ளத்தில் விழுந்த பள்ளி ஆசிரியர் ஒருவர், கிட்டத்தட்ட 14 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். உணவும் குடிநீரும் இல்லாமல் தவித்த அவர், பள்ளத்தில் தேங்கியிருந்த களிமண் கலந்த நீரைக் குடித்து உயிர் பிழைத்துள்ளார். இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட ஆசிரியர் மீண்டும் உயிருடன் வந்திருப்பது அவரது குடும்பத்தினரையும் கிராம மக்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நிலச்சரிவில் பள்ளத்தில் விழுந்த ஆசிரியர்

ஒடிசாவின் மலைப்பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் வீடுகள் சேதமடைந்ததுடன், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட இடிபாடுகளுக்கு நடுவே சிக்கிய மோகன் மகாராணா என்ற பள்ளி ஆசிரியர், பாறைகளுக்கு இடையில் இருந்த ஆழமான பள்ளத்தில் விழுந்துள்ளார்.

இதையும் படிங்க: பெண்களே உஷார்! சமையல் செய்தபோது திடீரென வெடித்து சிதறிய பிரஷர் குக்கர்! 18 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்... பகீர் சம்பவம்..!!!

சுற்றிலும் அடர்ந்த காடும் மலைப்பகுதியும் இருந்ததால் அவரால் வெளியே வர முடியவில்லை. தொடர்ந்து பெய்த மழையால் மீட்புப் பணிகளும் பாதிக்கப்பட்டது. உணவு, குடிநீர் என எந்த வசதியும் இல்லாத நிலையில், பள்ளத்தில் தேங்கியிருந்த களிமண் கலந்த நீரைக் குடித்தே அவர் நாட்களைக் கழித்துள்ளார்.

தேடுதல் பணியில் கிடைக்காத தகவல்; இறந்துவிட்டதாகக் கருதிய குடும்பத்தினர்

மோகன் மகாராணாவைக் காணவில்லை எனத் தெரிந்ததும் குடும்பத்தினரும் காவல்துறையினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அவர் உயிரிழந்திருக்கலாம் என குடும்பத்தினர் வேதனையில் இருந்துள்ளனர்.

ஆடு மேய்ப்பவர்கு கேட்ட குரல் 

சம்பவம் நடந்து சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அந்த வழியாகச் சென்ற ஆடு மேய்ப்பவர் ஒருவருக்கு பள்ளத்தில் இருந்து மெல்லிய குரல் கேட்டுள்ளது. இதையடுத்து அவர் கிராம மக்களுக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து சென்று பார்த்தபோது, பள்ளத்தில் மோகன் மகாராணா உயிருடன் இருப்பது தெரியவந்தது. பின்னர் அவரைப் பாதுகாப்பாக மீட்டனர்.

பல நாட்களாக உணவு இல்லாமல் இருந்ததால் அவர் மிகவும் உடல் மெலிந்து காணப்பட்டார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 14 நாட்கள் தனியாகப் போராடி உயிர் பிழைத்த ஆசிரியர் மீட்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: பள்ளி அருகே விளையாடிய 4 வயது சிறுமி திடீர் மாயம்! 2 நாட்களுக்கு பிறகு தோட்ட புதரில் கிடந்த சடலம்... தந்தை சொன்ன அதிரவைக்கும் உண்மை! நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ஒடிசா நிலச்சரிவு #மோகன் மகாராணா #பள்ளி ஆசிரியர் மீட்பு #Odisha Landslide #14 Days Survival
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story