நவராத்திரியின் முதல் நாளில் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்! இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு அதிஷ்ட மழை....
நவராத்திரியின் முதல் நாளில் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம் மகர, தனுசு, கன்னி ராசிக்காரர்களுக்கு தொழில், செல்வம், கல்வி, நற்பெயர் ஆகிய துறைகளில் நன்மை தரும்.
நவராத்திரியின் புனிதமான முதல் நாளில் உருவாகும் சிறப்பான நவபஞ்ச ராஜயோகம் பல ராசிக்காரர்களுக்கு நன்மை தரும் வாய்ப்பாக இருக்கிறது. குறிப்பாக மகர, தனுசு, கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் புதிய சாதனைகள், செல்வ வளம் மற்றும் சமூக அந்தஸ்து உயர்வு ஏற்படும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
மகர ராசி
மகர ராசிக்காரர்களுக்கு இந்நாளில் உருவாகும் யோகம் வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்த சவால்களை முடிவுக்கு கொண்டு வரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். ஆன்மீக ஆர்வம் அதிகரித்து வீட்டில் அமைதி நிலவும். வணிகத்தில் ஈடுபடும் நபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மொத்தத்தில், மகர ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் நிரம்பிய காலத்தை சந்திக்க உள்ளனர்.
தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் தொழில் மற்றும் சமூக அந்தஸ்தில் உயர்வை வழங்கும். வேலைப்புரிபவர்களுக்கு புதிய வாய்ப்புகள், பாராட்டுகள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்ததை விட சிறந்த வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டியில் வெற்றி காண்பீர்கள். நிதி நிலை வலுவடைந்து, வீடு, நிலம், நகை போன்ற ஆடம்பரங்கள் அதிகரிக்கும்.
இதையும் படிங்க: 300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்! மூன்று முக்கிய கிரகங்களும் இணைந்து அதிர்ஷ்டம் பெறவுள்ள ராசியினர் இவர்களே!
கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் நேர்மறையான பல மாற்றங்களை ஏற்படுத்தும். மேலதிகாரிகளின் பாராட்டு, அலுவலகத்தில் முக்கிய பொறுப்பு கிடைக்கும். வணிகத்தில் புதிய லாப வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத பண வரவு உண்டாகும். புதிய வருமான வழிகள் திறக்கப்படுவதால் நிதி நிலை மேம்படும். உடல் ஆரோக்கியம் உயர்ந்து, கடன்கள் தீரும்.
இந்த நவராத்திரி காலத்தில் உருவாகும் ராஜயோகம், பலருக்கும் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை வழங்கும் என்று நம்பப்படுகிறது. ஆனாலும், இது ஜோதிட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது என்பதையும், நம்பிக்கைக்கு ஏற்ப எடுத்துக்கொள்ள வேண்டியதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: ஆகஸ்ட் 11–17 வார ராசி பலன்! அதிர்ஷ்ட கதவு திறப்பதால் ஆதித்ய யோகம் பெரும் 5 ராசியினர்கள்! சூரியனால் திடீர் சொத்து வரவு!