×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருச்செந்தூரில் ஆச்சரியம்... கடல் உள்வாங்கியதும் காட்சியளித்த கருப்பசாமி சிலை!

திருச்செந்தூரில் ஆச்சரியம்... கடல் உள்வாங்கியதும் காட்சியளித்த கருப்பசாமி சிலை!

Advertisement

திருச்செந்தூரில் கடல் சுமார் 50 அடி வரை உள்வாங்கிய நிலையில், கடலுக்குள் இருந்த பாறைகள் மற்றும் சிலைகள் வெளியே தென்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக பச்சைநிற பாசி படிந்த பகுதிகளுக்கு இடையே சுமார் ஒரு அடி உயரமுள்ள கருப்பசாமி சிலை தென்பட்டதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் சிலையை வணங்கி வருகின்றனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை பகுதியில் பௌர்ணமி, அமாவாசை உள்ளிட்ட நாட்களில் கடல் நீர் உள்வாங்குவது வழக்கமாகக் காணப்படுகிறது. இதுபோன்ற நேரங்களில் கடலுக்குள் மறைந்திருந்த பாறைகள் வெளியே தெரிவதுடன், கடல் அரிப்பு காரணமாக பழமையான கற்சிலைகள் மற்றும் கல்வெட்டுகளும் அவ்வப்போது வெளிப்பட்டுள்ளன.

கடந்த காலங்களிலும் திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் கருப்பசாமி சிலை உள்ளிட்ட பல்வேறு சிலைகள் கரை ஒதுங்கியதாக கூறப்படுகிறது. 2025-ல் மட்டும் பல கற்சிலைகள் மற்றும் கல்வெட்டுகள் கடல் அரிப்பால் வெளிப்பட்டதாகவும், அவற்றில் சில சேதமடைந்த நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: டாஸ்மாக் மதுபாட்டிலில் இறந்த வண்டு? குடித்த தொழிலாளிக்கு வாந்தி, மயக்கம்.!

இதனிடையே, கடலில் இருந்து சிலைகள் தொடர்ந்து கரை ஒதுங்குவதால் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாமல் அவற்றை முறையாக பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கடல் உள்வாங்கிய பகுதிகளில் பாசி படிந்த பாறைகள் வழுக்கும் தன்மை கொண்டவை என்பதால், பக்தர்கள் கடலுக்குள் சென்று சிலைகளை பார்க்கவோ, பாறைகள் மீது ஏறவோ கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நாளை திருமணம்... இன்று மாப்பிள்ளை கண்முன்னே மணப்பெண்ணுக்கே நேர்ந்த கோர சம்பவம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Thiruchendur #Thiruchendur Sea #Amavasai #Karuppasamy statue
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story