×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நிச்சயத்திற்கு பின் திருமணத்தை நிறுத்தலாமா?.. பலருக்கும் தெரியாத உண்மை.!

ஆன்மீகத்தில் பலருக்கும் இருக்கும் சில முக்கிய சந்தேகங்களுக்கான விளக்கத்தை காணலாம்.

Advertisement

ஆன்மீகத்தை பற்றிய பல்வேறு கேள்விகள் பொதுமக்களிடையே அடிக்கடி எழுவது வழக்கமான ஒன்றாகும். வீட்டில் நடைபெறும் விசேஷங்கள், திருமண நிகழ்ச்சிகள் மற்றும் ஜோதிடத்தில் உள்ள சில விஷயங்கள் குறித்து பலருக்கும் தெளிவு இருக்காது. அந்த வகையில் அடிக்கடி கேட்கப்படும் சில ஆன்மீக சந்தேகங்களுக்கான விளக்கங்களை இப்பதிவில் காணலாம். 

வீடு கட்டுவதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?

வீடு கட்டும் போது முதலில் அவரவரின் குல தெய்வத்தை வழிபட்டு விட்டு, பெற்றோரை வணங்கி அனுமதி பெற்று அந்த பணிகளை தொடங்கலாம். பூமி பூஜை நடைபெறும் நாளில் வாஸ்து பூஜை செய்வதும் வழக்கம். வாஸ்து பூஜையில் முதலில் விநாயகரையும், நவகிரகங்களையும் வழிபட்டு ஹோமம் நடத்துவது நல்லது. அதன்பின் அஷ்ட திக் பாலகர்கள் எனப்படும் இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய எட்டு திசை தெய்வங்களையும் தனித்தனியாக பூஜை செய்து வணங்க வேண்டும். இதன் மூலம் எந்த தடையுமின்றி வீடு கட்ட தொடங்கியது நல்லதாக முடியும். 

இதையும் படிங்க: Warning: எலி கடித்தவுடன் என்ன செய்ய வேண்டும்?.. அலட்சியமாக இருக்காதீங்க.. உயிருக்கே உலை வைக்கும்.!

நிச்சயதார்த்தத்திற்கு பின் திருமணத்தை நிறுத்தலாமா?

சாஸ்திரப்படி நிச்சயதார்த்தம் என்பது திருமணத்திற்கு முந்தைய நாளில் நடத்தப்படுவது சிறந்ததாகும். தற்போது இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பு அல்லது ஒரு வருடத்திற்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்து கொண்டு திருமணம் செய்கிறார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் ஏதேனும் ஒரு சிக்கல் உண்டாகும் பட்சத்தில் அதற்கு ஏற்றார் போல் ஒப்பந்தத்தை, அதாவது நிச்சயதார்த்தத்தை ரத்து செய்து கொள்ளலாம். அதே நேரத்தில் திருமணத்திற்கு முதல் நாள் பந்தலில் நிச்சயதார்த்தம் செய்துவிட்டு மறுநாள் திருமணத்தை நிறுத்தினால் குடும்பத்திற்கு தோஷம் வரும். இருவீட்டாரும் சில பிரச்சனைகளை சந்திப்பார்கள். 

ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன?

ஜாதகத்தில் மாந்தி என்பது சனியின் துணைக்கோளாகும். ஒவ்வொரு கிரகத்துக்கும் நேர்மறையான பலன்களை தரும் திறனும், எதிர்மறை திறனும் இருக்கும். சனி கிரகம் தரக்கூடிய எதிர்மறை பலன்களை மாந்தி என்றும் கூறுவார்கள். நற்பலன்களை தடுத்து எதிர்மறையான பலன்களை மாந்தி தரும். கேரள ஜோதிடர்கள் இதனால் மாந்திக்கு முக்கியத்துவம் தருவார்கள். லக்னத்தில் மாந்தி இருந்தால் சுறுசுறுப்பு குறைந்து சோம்பேறித்தனத்துடன் இருப்பார்கள். இரண்டாம் வீட்டில் இருக்கும் பட்சத்தில் பேச்சில் தடுமாற்றம், தனம் குறைதல் பிரச்சனை இருக்கும். 

மாந்தியின் நிலையைப் பொறுத்த பலன்கள்:

மூன்றில் இருந்தால் தைரியம் இல்லாமல் போகும். நான்கில் இருந்தால் சொந்த வீடு, வாகனம் இருக்காது. அப்படியே இருந்தாலும் அதனை அனுபவிக்க முடியாதது. புத்திரர்களால் கஷ்டம், வியாதி, வாழ்க்கை துணையின் வாயிலாக பிரச்சனை, குறைந்த ஆயுள் காலம், மரணம், பித்ரு தோஷம் என நிலைக்கு ஏற்ப மாற்றங்கள் ஏற்படும். இதில் பத்தில் இருந்தால் உத்தியோகத்தில் நிலையில்லாத தன்மை, 11ல் அவப்பெயர் உண்டாகுதல், 12ல் உறக்கமின்மை மனதில் நிம்மதியற்ற நிலை போன்றவை ஏற்படும்.

இதையும் படிங்க: ஆதார் கார்டில் மாற்றம் செய்யும் முன் உஷார்.. பலருக்கும் தெரியாத UIDAI விதிகள்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#நிச்சயதார்த்தம் #spiritual doubts #vastu pooja #வாஸ்து பூஜை #ஆன்மிகம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story