மூன்று முறை நடக்கும் அரிய சூரிய பெயர்ச்சி! இந்த 3 ராசியினர் பண வரவு, பதிவு உயர்வு, ராஜ யோகத்தை அனுபவிக்கப்போகும் ராசியினர்! இனி பொற்காலம் தான்!
பிப்ரவரி மாதத்தில் மூன்று முறை நடைபெறும் சூரிய பெயர்ச்சியால் தனுசு, சிம்மம், மேஷம் ராசியினருக்கு பணவரவு, பதவி உயர்வு, புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
பிப்ரவரி மாதம் ஜோதிட ரீதியாக மிக முக்கியமான காலகட்டமாகக் கருதப்படுகிறது. ஒரே மாதத்தில் சூரியன் மூன்று முறை தனது நிலையை மாற்றவுள்ளதால், 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பொருளாதார ரீதியில் சில ராசியினருக்கு அதிர்ஷ்டம் பெருகும் வாய்ப்பு உள்ளது.
பிப்ரவரியில் சூரிய பெயர்ச்சி விவரங்கள்
ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களுக்கும் அதிபதியான சூரியன், பிப்ரவரி 06 ஆம் தேதி அவிட்டம் நட்சத்திரத்திற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். தொடர்ந்து பிப்ரவரி 13 ஆம் தேதி மகர ராசியில் இருந்து வெளியேறி கும்ப ராசிக்கு செல்கிறார். பின்னர் பிப்ரவரி 19 ஆம் தேதி சதயம் நட்சத்திரத்திற்கு மாற்றம் பெறுகிறார். இந்த மூன்று அரிய பெயர்ச்சிகளும் சேர்ந்து முக்கியமான பலன்களை வழங்கும் என கூறப்படுகிறது.
தனுசு ராசி – பணவரவு அதிகரிக்கும்
பிப்ரவரியில் நடைபெறும் இந்த சூரிய பெயர்ச்சி தனுசு ராசியினருக்கு எதிர்பாராத பொருளாதார உயர்வை அளிக்கும். வியாபாரத்தில் இருப்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பழைய முதலீடுகளில் இருந்து கூடுதல் வருமானம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அரசு பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கலாம். மொத்தத்தில் பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
இதையும் படிங்க: செவ்வாய் பெயர்ச்சி ஜனவரி 16 ஆம் தேதி! இந்த 5 ராசியினருக்கு இரட்டிப்பாகும் நன்மைகள்!
சிம்மம் – அதிர்ஷ்ட வாய்ப்புகள் பெருகும்
சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த சிம்ம ராசியினருக்கு இந்த பெயர்ச்சி மிகுந்த அதிர்ஷ்டத்தை வழங்கும். வருமானத்தில் எதிர்பாராத உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த குடும்ப பிரச்சினைகளுக்கு மகிழ்ச்சிகரமான முடிவு கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் அமையும். வேலை தேடுபவர்களுக்கு உயர் சம்பளத்தில் மனதுக்கு பிடித்த வேலை கிடைக்கும். இந்த காலகட்டம் பண அதிர்ஷ்டம் நிறைந்ததாக அமையும்.
மேஷம் – வாழ்க்கையில் முன்னேற்றம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சியால் வாழ்க்கையில் பெரும் முன்னேற்றம் காணப்படும். தொழில், காதல், திருமண வாழ்க்கை, உறவுகள் அனைத்திலும் மகிழ்ச்சி கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, புதிய வருமான ஆதாரங்கள் மூலம் பணவரவு அதிகரிக்கும். கடன் பிரச்சினைகளுக்கு முடிவுகட்டுவீர்கள். உயர் பதவி கிடைக்கும் யோகம் காணப்படுகிறது. சூரிய பகவானின் ஆசீர்வாதத்தால் தலைமைத்துவ பண்புகள் மேலோங்கும். இவர்களுக்கு அடுத்த மாதம் பொற்காலம் போல அமையும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு ஜோதிடர்கள், பஞ்சாங்கங்கள் மற்றும் ஆன்மீக நூல்களில் இருந்து பெறப்பட்டவை. எங்கள் நோக்கம் தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே. எதிர்கால பலன்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதக நிலைகளைப் பொறுத்து மாறுபடலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.