×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உங்களின் வீடுதேடி காகம் வருகிறதா? ஆன்மீக சொந்தங்களே கவனிங்க..! 

Spiritual Meaning of a Crow Visiting: காகம் நமது வீட்டுக்கு வருவது முக்கிய அறிகுறி என்பதால் கவனிக்க வேண்டும். 

Advertisement

காகங்கள் நமது வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை முன்பே கணிக்கவல்லவை என ஜோதிடம் சொல்கிறது. 

பகவானின் வாகனம்: 

Crow Symbolism in Hindu Astrology: ஆன்மீகத்தில் தனிச்சிறப்பு இடத்தை கொண்ட காகங்கள், சனிபகவானின் வாகனம் ஆகும். இதனால் காகங்கள் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை முன்பே அறிகுறிகள் போல காண்பிக்கும். காகம் நமது வீட்டுக்கு வந்தால் நல்லதா? கெட்டதா? என்ற சந்தேகம் இருக்கும். 

இதையும் படிங்க: கலப்பட வெல்லத்தை கண்டுபிடிப்பது எப்படி?.. வீட்டிலேயே எளிய முறையில் கண்டறிய டிப்ஸ்.!

கலவையான நிலை: 

பொதுவாக வீட்டுக்குள் எந்த விலங்கு வந்தாலும் அது நல்லது அல்லது கெட்ட அறிகுறி என பிரித்து பார்க்கப்படுகிறது. ஆனால், காகம் வீட்டுக்குள் வந்தால் நமக்கு கலவையான விளைவைத்தரும். நீங்கள் பயணம் செய்யும்போது காகம் உங்கள் வீட்டுக்குள் வந்தால், உரத்த குரலில் அலறல் செய்தால் பயணம் நல்லபடியாக வெற்றியுடன் முடியும் என்பது அர்த்தம் ஆகும். வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். 

வெற்றி: 

வேலை அல்லது நேர்காணல், சுபகாரியத்துக்கு செல்லும்போது வீட்டில் இருந்து மேற்கு நோக்கி காகம் பறந்தால் வெற்றி கிடைக்கும்.  காலை நேரத்தில் வீட்டில் வடக்கு / கிழக்கு நோக்கி பறந்தால் விருந்தினர் வரலாம். நெருங்கிய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கலாம். காகங்கள் வீட்டில் ஒன்றாக சேர்ந்து கூடி கத்தினால் கவனம் தேவை என்பதன் அர்த்தம் ஆகும். நெருக்கடி, ஆபத்து, விரும்பத்தகாத நிலை ஏற்படலாம். வீட்டின் தெற்கு பகுதியில் காகம் அமர்ந்தாள் முன்னோர்கள் கோபமாக இருக்கலாம். வீட்டில் காகங்கள் சந்தித்துக்கொண்டால் திருமணம் குறித்த நல்ல செய்தி கிடைக்கலாம். 

இதையும் படிங்க: உங்களின் கனவில் விநாயகர் இப்படி வருகிறாரா? இதுதான் அர்த்தமாம்..!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Spiritual Tips #ஆன்மிகம் #காகம் #பலன்கள்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story