தோஷங்களை நீக்கும் பைரவர் வழிபாடு.. உங்க ராசிக்கு எப்படி வணங்க வேண்டும்? தெரிஞ்சிக்கோங்க.!
Bhairava Vazhipadu: பைரவர் வழிபாடு கடுமையான தோஷங்களை நிவர்த்தி செய்யும்.
துன்பங்களை தரும் தோஷங்களை சரி செய்ய பைரவர் வழிபாடு முக்கியம்.
இந்துமத வேதங்களின்படி கிரக தோஷம் என்பது மனிதரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும், இன்னலை கொடுக்கும் விஷயம் ஆகும். இந்த இன்னலில் இருந்து விடுபட பைரவர் வழிபாடு மிகப்பெரிய உதவியை தரும். நவகிரகங்கள் அனைத்தும் பைரவருக்கும் இருப்பதால், அவரை வணங்குவது ஒட்டுமொத்த கிரகத்தையும் சாந்தப்படுத்தும்.
12 ராசிக்காரர்களும் தங்களின் ராசிக்குரிய உடல் அம்சங்களை பார்த்து வணங்குவது நல்லது. சிவனின் அம்சமாக இருக்கும் கால பைரவர், பக்தர்களின் தீர்க்க இயலாத துயரங்கள், கிரக தோஷங்களை நீக்கும் வல்லமை கொண்டவர் ஆவார்.
இதையும் படிங்க: இன்று அமாவாசை.. மாலைக்குள் இதை கண்டிப்பாக பண்ணிடுங்க..!
எந்த ராசிக்கு எந்த உடல் பாகம்?
மேஷ ராசி - பைரவரின் சிரசு (தலை)
ரிஷப ராசி - கழுத்து
மிதுன ராசி - தோள்
கடக ராசி - மார்பு
சிம்ம ராசி - வயிறு
கன்னி ராசி - இடுப்புக்கு கீழ் பகுதி
துலாம் - தொடை
விருச்சகம் - முட்டி
தனுசு, மகரம் - மூட்டுக்கு கீழ்ப்பகுதி
கும்பம் - கணுக்கால்
மீனம் - பாதம்
வழிபாடு நாள்:
பைரவரை வழிபட தேய்பிறை அஷ்டமி உகந்த நாள் ஆகும். இன்னாளில் அஷ்ட லட்சுமிகளும் பைரவரை பிரார்த்திப்பதாக கூறுவார்கள். இந்த நாளில் பைரவரை வணங்க செல்வம் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் பைரவரை வழிபடுவது எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பை தரும். பைரவரை எட்டுமுறை வலம்வந்து, செவ்வரளி மலர்கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டுதல் நிறைவேறும். பைரவர் பாராயணம் நல்லது.
இதையும் படிங்க: இன்று 4 மகா யோகங்கள் இணைவு..... இன்றைய ராசிபலன்கள் 12 ராசிகளுக்கும் தலைகீழ் மாற்றம்....உங்கள் ராசிக்கு என்ன அதிஷ்டம் பாருங்க...!!!