தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அக்னி நட்சத்திர நாள்.. இந்த ராசிகளுக்கெல்லாம் கொட்டும் அதிர்ஷ்டம்.!!

அக்னி நட்சத்திர நாள்.. இந்த ராசிக்கெல்லாம் கொட்டும் அதிர்ஷ்டம்.!!

agni-nakshatra-today-horoscope-may-4 Advertisement

கத்திரி வெயில் என அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம், மே மாதம் நான்காம் தேதியான இன்று முதல் தொடங்குகிறது. அக்னி நட்சத்திர நாளான இன்று 12 ராசியினருக்கும் எப்படி இருக்கும்? என்ற துல்லியமான பலனை இச்செய்தி தொகுப்பில் காணலாம். 

 

மேஷம்

உங்களின் குடும்பத்தில் சுப காரியம் நடைபெறும். வேலை இல்லாமல் தவிப்போருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கலாம். நிதி நிலைமை பிறருக்கு உதவும் வகையில் இருக்கும். திடீர் நிதி ஆதாயம் ஏற்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு இன்று வேலைகள் சீராக நடக்க வாய்ப்புகள் அதிகம். தொழிலில் லாபம் அதிகரிக்கலாம். வருமானம் கூடிவரும். நிதி ஆதாயத்திற்கும் வாய்ப்புகள் உள்ளன. எடுக்கும் முடிவுகளில் நல்ல பலன் கிடைக்கும். உடல்நலத்துக்கு தீங்கு இல்லை. 

மிதுனம்

மிதுன ராசியினருக்கு இன்று சுமூகமான நாளாக அமைகிறது. தொழில், வியாபாரம் எதிர்பாத்த பலனைத் தரலாம். வருமானம் அதிகரிக்கும். மாணவர்கள் நினைத்த காரியங்களில் வெற்றி அடைவார்கள். வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். 

கடகம்

கடக்க ராசியினரின் வார்த்தைக்கு மதிப்பு கூடும். தொழில், வேலை, வருமானம் நல்லபடியாக இருக்கும். தான் இன்று எடுக்கும் அனைத்து முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். நிதிநிலைமை சீராகும். அற்புதமான நாளாக இன்று அமைகிறது.

சிம்மம்

வேலையில் பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். உறவினர்களால் பிரச்சனை ஏற்படலாம். நிதி சார்ந்த விஷயத்தில் ஏமாற்றம் அடையாமல் தவிர்ப்பது நல்லது. 

கன்னி

கன்னி ராசியினருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினைக்கு இன்று தீர்வு காண வாய்ப்புகள் உண்டு. கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை கிடைக்கும். குடும்ப விவகாரத்தை சரி செய்யும் போது வாழ்க்கை துணையுடன் ஆலோசிக்க வேண்டும். வேலை இல்லாதவர்கள் தொலைதூரத்தில் இருந்து விரும்பிய தகவலை பெறலாம். 

துலாம்

துலாம் ராசியினருக்கு வேலையில் முன்னுரிமை கிடைக்கும். செயல் திறன் மகிழ்ச்சியை அளிக்கும். புகழ் அதிகரிக்கும். இன்றைய நாளில் தொழில் லாபகரமாக இருக்கும். வருமானம் அதிகரித்து நிதி பற்றாக்குறை நீங்கும். ஆதாயம் ஏற்படும் அதிஷ்டம் நிறைந்த நாளாக அமைகிறது.

விருச்சிகம்

அனைத்து முயற்சிகளும் வெற்றி கிடைக்கும். முக்கியமான காரியங்கள் முடித்து வைக்கப்படும். நிதி சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். சொத்து தகராறில் கவனத்துடன் இருப்பது நல்லது. வருமானம் அதிகரிக்கும். வீண் செலவை கட்டுப்படுத்தினால் நல்லது. 

தனுசு

தனுசு ராசியினருக்கு வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வார்த்தைக்கு உள்ளேயும், வெளியேயும் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மீக விஷயத்தில் கவனம் செலுத்தலாம். பணிகள் குறித்த நேரத்தில் முடிக்கப்படும். மாணவர்கள் எதிர்பார்த்த தகவல் விரைவில் வந்தடையும். உங்களின் இந்த நாள் அதிஷ்டம் நிறைந்த நாளாக அமைகிறது.

மகரம்

உங்களின் தேவைகள் விரைவில் பூர்த்தியாகும். பணவரவு கிடைக்கும். இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றலாம். எதிர்பார்த்த அணைத்து விஷயங்களும் பூர்த்தியாகும் அதிர்ஷ்ட நாளாக அமைகிறது.

கும்பம்

கும்ப ராசியினருக்கு இன்று வேலையில் யோகம் உள்ளது. அதிகாரிகளின் திறமைகள் மீது நம்பிக்கை கிடைக்கும். நிதி ரீதியாக வாக்குறுதி அளிக்காமல் இருப்பது நல்லது. இன்றைய நாளில் கவனத்துடன் இருப்பது நல்லது. 

மீனம்

தொழில் மற்றும் வேலை விஷயத்தில் செல்வாக்கு மேலோங்கும். வியாபாரிகளுக்கு தொழிலில் எதிர்பார்த்த நிதிவரவு கிடைக்கும். திருமணம் முயற்சிகள் கைகூடும். நிதிநிலைமை சாதகமாகும். இன்றைய நாள் அதிர்ஷ்டகரமான நாளாக அமைகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#agni nakshatra #Horoscope #today horoscope #அக்னி நட்சத்திர நாள் #ராசி பலன்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story