ஆடி வெள்ளிக்கிழமை வழிபாடு முக்கியம் ஏன்? பக்த கோடிகளே தயாராகுங்க.!
Aadi Vellikizhamai: ஆடி வெள்ளிக்கிழமை வழிபாடு முக்கியம் ஆகும்.
புண்ணியத்தின் தொடக்க காலமான ஆடியை அம்மன் அருளுடன் வரவேற்க வேண்டும்.
2026 ஆடி:
Aadi Month Friday Festival: தமிழ் மாதங்களில் ஆடி புண்ணியத்தின் தொடக்க காலத்தினை குறிக்கிறது. அதாவது, சூரியன் வடக்கு நோக்கிய பயணத்தை நிறைவுசெய்து, பின் தெற்கு நோக்கி பயணிக்க தொடங்கும் காலம் ஆடி மாதம் ஆகும். தமிழ் நாட்காட்டியின்படி ஜூலை 17, 2026 முதல் ஆகஸ்ட் 17, 2026 வரை ஆடி மாதம் இருக்கிறது.
இதையும் படிங்க: குலதெய்வத்தை வீட்டில் வணங்குவது எப்படி?.. ஆன்மீக பக்தர்களே தெரிஞ்சிக்கோங்க.!
வழிபாடு:
தேவர்களின் ஒரு நாள் மனிதர்களுக்கு ஆறு மாதங்கள் ஆகும். இவர்களின் இரவுப்பொழுது தொடங்கும் ஆடி மாதத்தில், பூமிக்கு தெய்வீக ஆற்றல் கிடைக்கும் என்பது ஆன்மீக நம்பிக்கை. ஆகையால், ஆடி வெள்ளிக்கிழமை விரதம், அம்மன் வழிபாடு மிகப்பெரிய நன்மையைத் தரும்.
அம்மனை வணங்கலாம்:
ஆடி வெள்ளியில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதியை வணங்கலாம். முதல் வெள்ளியில் முக்கண்ணி அம்மன், இரண்டாம் வெள்ளியில் செல்வத்தை தரும் லட்சுமிக்கு வரலட்சுமி விரதம், மூன்றாம் வெள்ளியில் கல்விக்கடவுள் சரஸ்வதி வழிபாடு, நான்காம் வெள்ளியில் பராசக்தி வழிபாடு நல்லது.
விரதம் & வழிபாடு:
வெள்ளிக்கிழமையில் அம்மன் கோயில்களில் சிறப்பு அலங்காரம், சந்தனக்காப்பு இருக்கும். கூழ் வார்த்தல் திருவிழா, வேப்பிலை ஆடை, மஞ்சள் நீர் தெளித்தால் நடக்கும். அதேபோல, ஆடி மாதம் கோடை முடிந்து மழைக்காலம் தொடங்கும் இடைப்பட்ட பருவநிலை காலம் ஆகும். இந்த காலத்தில் நோய் கிருமிகள் பரவாமல் தடுக்க கொண்டாட்டத்துடன் பாதுகாப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகிறது. குடும்பத்தின் நலனுக்காக விரதம் இருந்தும் அம்மனை வழிபடலாம்.
இதையும் படிங்க: இன்று அமாவாசை.. மாலைக்குள் இதை கண்டிப்பாக பண்ணிடுங்க..!