×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அள்ள அள்ளக் குறையாத செல்வம் தரும்., ஆடிவெள்ளி வழிபாடு.! நாளை எப்படி செய்வது.?!

அள்ள அள்ளக் குறையாத செல்வம் தரும்., ஆடிவெள்ளி வழிபாடு.! நாளை எப்படி செய்வது.?!

Advertisement

ஆடி வெள்ளி, செவ்வாய் என்றால் அம்மனுக்கு உகந்த நாள். இந்த நாளில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு மேற்கொள்வது வழக்கம். இந்த ஆடி வெள்ளியில் விரதம் இருந்து அம்மனை பூஜிப்பதால் நினைத்தது நடக்கும். வீட்டில் செல்வம் பெருகும்.

சுக்கிரனுக்குரிய கிழமையான வெள்ளியில் அம்பிகையை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் நிகழும். அந்நாளில் காலை மற்றும் மாலையில் வாசல் தெளித்து கோலம் போட்டு விளக்கேற்றி வழிபடலாம். 

அம்மன் படங்களுக்கு தீப ஆராதனை காட்டி வழிபாடு செய்யலாம். வேப்பிலை மாலை, எலுமிச்சை மாலை உள்ளிட்டவற்றை அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு இடுவது நல்லது. ஆடி மாத அனைத்து வெள்ளிக்கிழமையும் வழிபட முடியவில்லை என்றாலும் ஒரு வெள்ளிக்கிழமை வழிபாடாவது மேற்கொள்ள வேண்டும். 

இதனால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். 

வறுமை, கடன் தொல்லை பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் இந்த வெள்ளிக்கிழமை வழிபாட்டால் தங்களது பொருளாதார நிலையை மேம்படுத்த முடியும். 

எதிரிகளால் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளையும் தீர்த்து மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை வாழ கடவுளின் ஆசி கிடைக்கும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#aadivelli #vazhipadu #amman vazhipadu #ambal vazhipadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story