ரிஷப் பன்டிற்கு குருவான தோனியின் மகள் ஷிவா! வைரலாகும் க்யூட் வீடியோ
Ziva dhoni teaches hindi to pant

ஐபிஎல் தொடரின் 12 ஆவது சீசனில் சென்னை அணி குவாலிபயர்-2 ரவுண்டில் டெல்லியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அனுபவம் வாய்ந்த சென்னை அணிக்கும், இளம் வீரர்களை கொண்ட டெல்லி அணிக்கும் நடைபெற்ற இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக தல தோனியின் இடத்தை நிரப்ப போராடும் ரிஷப் பன்டின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர்.
உலகக்கோப்பை அணியில் ரிஷப் பன்ட் இடம்பெறாவிட்டாலும், எதிர்கால இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக தோனியின் இடத்தை இவர் தான் நிரப்புவார் என்ற நம்பிக்கை அனைவர் மனதிலும் உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஆட்டம் முடிந்ததும் ரிஷப் பன்ட் தோனியின் மகள் ஷிவாவுடன் உறையாடும் காட்சி வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு காரணம் ஷிவா, ரிஷப் பன்ட்டிற்கு ஹிந்தி வார்த்தைகளை சொல்லிக் கொடுப்பதும் ரிஷப் பன்ட் திருப்பி சொல்வதுமாக இருப்பதும் தான்.
ரிஷப் பன்ட் ஏற்கனவே தோனியை பற்றி பேசுகையில், என்னுடைய கீப்பிங், பேட்டிங் மற்றும் எந்த முடிவுகளை எடுப்பதிலும் எனக்கு பக்கபலமாக இருப்பவர் தோனி. அவர் தான் என் குரு என கூறியுள்ளார். தற்போது தோனியின் மகளும் ரிஷப் பன்டிற்கு குருவாகி இருக்கும் வீடியோ அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.