உயிரை பணயம் வைத்து இது தேவையா! ரயில்வே பாலத்தில் இளைஞர்களின் ஆபத்தான ரீல் வீடியோ!
சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவில், மூன்று இளைஞர்கள் ரயில்வே பாலத்தில் ஆபத்தான ரீல் எடுத்து உயிரை பணயம் வைத்தது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய இளைஞர்கள் புகழைப் பெறுவதற்காக சமூக வலைதளங்களில் ஆபத்தான செயல்களை மேற்கொள்வது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ, இளைஞர்களின் உயிர் பாதுகாப்பு குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஆபத்தான ரீல் படைப்பில் மூன்று இளைஞர்கள்
மூன்று இளைஞர்கள் ரயில்வே பாலம் தண்டவாளத்தில் நின்று ரீல் எடுக்க முயன்றுள்ளனர். பாலத்தின் கீழே ஆறு ஓடிக்கொண்டிருக்க, ரயில் மிக வேகமாக நெருங்கும் தருணத்தில், மூவரும் ஒருவருக்குப் பின் ஒருவர் திடீரென குதித்துள்ளனர். அந்த காட்சி பார்ப்போருக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
நொடியில் உயிரிழப்பதை தவிர்த்தனர்
இந்த சம்பவம் எந்த மாநிலத்தில் நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனினும், ரயிலின் அதிக வேகம் காரணமாக சில விநாடிகள் தாமதமாகியிருந்தால் மூவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகம் இருந்தது. ஆனால் சமூக வலைதளங்களில் வைரல் ஆகும் நோக்கில் அவர்கள் தங்களையே ஆபத்தில் ஆழ்த்திக் கொண்டனர்.
சமூக வலைதளங்களில் கண்டனம்
இளைஞர்கள் ரீல் எடுப்பது தவறல்ல, ஆனால் அதற்காக உயிரை பணயம் வைப்பது முற்றிலும் தவறு என பலரும் வலியுறுத்துகின்றனர். இதுபோன்ற செயல்களுக்கு கட்டுப்பாடு அவசியம் என சமூக வலைதளங்களில் பெருமளவு கண்டனங்கள் எழுந்துள்ளன.
இளைஞர்களின் சாகச ஆர்வம் உயிரை இழக்கும் நிலைக்கு தள்ளக்கூடாது. சமூக வலைதளங்கள் பொழுதுபோக்கிற்கான மேடை என்றாலும், பாதுகாப்பை புறக்கணிக்கும் விதமாக பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்பதே இச்சம்பவம் தரும் முக்கியமான எச்சரிக்கை.
இதையும் படிங்க: பாவம்ல.. என்னதா இருந்தாலும் அதுவும் ஒரு உயிர் தானே! மலைப்பாம்பை மனசாட்சியே இல்லாமல் பைக்கில் தரதரவென... வைரல் வீடியோ!