×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அரையிறுதியில் எந்த அணி எந்த அணியுடன் மோதுகிறது? இறுதிப்போட்டிக்கு நுழைய இந்திய அணிக்கு வாய்ப்பு உள்ளதா?

world cup semi final matches

Advertisement


அரை இறுதி போட்டிக்கு நுழையும் நான்காவது அணியை தீர்மானிக்கும் முக்கியமான போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் ஆடிவருகிறது. அரையிறுதியில் நான்காவதாக நுழைவதற்கு நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு வாய்ப்புகள் இருந்தன. பாக்கிஸ்தான் அணி அரையிறுதியில் நுழைவதற்கு பாகிஸ்தான் அணி பங்களாதேசை அதிகமான ரன் ரேட்டில் வென்றாக வேண்டும் என்ற சூழ்நிலை உருவானது. 

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்தது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற பங்களாதேசை வெறும் 7 ரன்களுக்கு ஆல் அவுட் செய்ய வேண்டும். இந்தநிலையில் பங்களாதேஷ் அணி இரண்டாவது ஓவரிலேயே 7 ரன்களை கடந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

நாளை லீக் போட்டிகள் நிறைவு பெறும் நிலையில், அரையிறுதியில் எந்த அணி எந்த அணியுடன் மோதும் என்பது தெரிந்துவிடும். நாளை நடக்கும் முதல் ஆட்டத்தில் இந்திய அணியும் இலங்கை அணியும் மோதுகிறது. நாளை நடக்கும் இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியும், தென் ஆப்பிரிக்க அணி மோதுகிறது. 

 நாளை நடைபெறும் முதல் ஆட்டத்தில் இந்திய அணி இலங்கை அணியை வீழ்த்தி, இரண்டாவது நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவிடம் தோற்க வேண்டும். இந்த நிகழ்வுகள் நடந்தால் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணிக்கும் நான்காம் இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணிக்கும் அரையிறுதிப் போட்டி நடைபெறும். அதேபோல் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் மூன்றாம் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணிக்கும் அரையிறுதி நடைபெறும்.

 இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் அரையிறுதியில் ஆடினால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. ஒருவேளை இந்திய அணி இங்கிலாந்துடன் அரையிறுதியில் மோதினால் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதில் சற்று சிரமமாக இருக்கும். எனவே இந்திய ரசிகர்கள் அனைவரும் அரைஇறுதியில் நியூசிலாந்து அணியுடன் மட்டுமே ஆட வேண்டும் என ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர்,

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#worldcup 2019 #Semifinal teams
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story