×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சச்சினை முந்திய கோலி, புதிய உலக சாதனை; யாரும் நெருங்க முடியாதோ.!

world cup 2019 - viraht kohli beat - sachin record

Advertisement

நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானை இந்தியா தொடர்ந்து 7வது முறை வென்று உள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இந்திய அணிக்கு சிறப்பான துவக்கத்தை அளித்தனர். முதல் விக்கெட்டிற்கு இருவரும் 136 ரன்கள் குவித்தனர். 24 ஆவது ஓவரில் கேஎல் ராகுல் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு களமிறங்கிய விராட் கோலி சிறப்பாக ஆடி 65 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். ரோகித் சர்மா 140 ரன்களிலும், ஹர்டிக் பாண்டியா 26 ரன்களிலும், தோனி ஒரு ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆட்டத்தில் 47 ஆவது ஓவரில் மழை குறுக்கிட்டது. மழை நின்ற பிறகு தொடர்ந்து ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமாக ஆடினர். ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரை வீசிய போது புவனேஷ்குமார் காலில் காயம் ஏற்படவே பாதியில் வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக பந்துவீச வந்த விஜய் சங்கர் முதல் பந்திலேயே இந்தியாவிற்கு முதல் விக்கெட்டை பெற்றுத் தந்தார்.

ஒரு கட்டத்தில் 35 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து மழை நின்றதும் ஆட்டம் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு பாகிஸ்தான் அணிக்கு 302 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 40 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் விராட் கோலி 77 ரன்கள் குவித்தார். இதன்மூலம் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் (222 ) 11 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனை படைத்தார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் 276 இன்னிங்ஸ்களில் கடந்ததே சாதனையாக இருந்தது.

குறைந்த இன்னிங்ஸில் 11000 ஒருநாள் ரன் எடுத்த வீரர்கள்: 
222 இன்னிங்ஸ் - விராட் கோஹ்லி 
276 சச்சின் டெண்டுல்கர் 
286 ரிக்கி பாண்டிங் 
288 சவுரவ் கங்குலி 
293 ஜாக்ஸ் காலிஸ் 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sachin #Kohli #new record
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story