"தள்ளிப்படுக்க எதுக்குடா கல்யாணம்?" கணவரை ஆள் வைத்து அடித்த மனைவி.. கணவன் அதிர்ச்சி முடிவு.!
தள்ளிப்படுக்க எதுக்குடா கல்யாணம்? கணவரை ஆள் வைத்து அடித்த மனைவி.. கணவன் அதிர்ச்சி முடிவு.!
பெங்களூரைச் சேர்ந்த ஒரு தம்பதி 5 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டது. ஆனால், இந்த தம்பதிகளுக்குள், தாம்பத்திய உறவு நடக்கவில்லை. எனவே, கணவர் மீது சந்தேகம் அடைந்த மனைவி மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்துள்ளார்.
அப்போது, கணவருக்கு உடல் ரீதியாக எந்த பிரச்சனையும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து மருத்துவரிடம் பேசியபோது மன அழுத்தம் காரணமாக உடலுறவு ஈடுபடவில்லை என்று கணவர் தெரிவித்துள்ளார். பின்னர் இருவருக்கும் சேர்ந்து வாழச்சொல்லி மருத்துவர் அறிவுரை சொல்லி அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால், கணவர் மீண்டும் அந்த பெண்ணுடன் சேர்ந்து வாழாமல் இருந்து வந்துள்ளார். இது அந்த பெண்ணிற்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. ஒரு கட்டத்தில் கோபமடைந்த அந்த பெண் தன் உறவினர்களை வைத்து சண்டை போட்டு கணவரை தாக்கியுள்ளார்.
இதையடுத்து அந்த கணவர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், "என்னை ஒரு திருநங்கை என்று கூறிய என் மனைவி, அவர் உறவினர்களுடன் சேர்ந்து என்னை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், என்னிடம் இருக்கும் சொத்துக்களை எழுதி வைக்க வேண்டும் என்று என் மனைவி வற்புறுத்துகிறார். நான் சேர்ந்து வாழ அவகாசம் கேட்டும் காத்திருக்காமல் தகராறு செய்கின்றார்." என்று புகார் கொடுத்துள்ளார்.
இது பற்றி காவல்துறை விசாரித்ததில் தொழில் மற்றும் வாழ்க்கை குறித்த பல்வேறு அழுத்தங்களில் அவர் இருப்பதால் மனைவியுடன் அவரால் நெருங்கி பழக முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். காவல்துறையினர் இது பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.