×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தோனி போல் ரன் அவுட் செய்ய நினைத்து திட்டு வாங்கிய விக்கெட் கீப்பர். வைரல் வீடியோ.

Wicket keeper tries to take wicket like dhoni and failed

Advertisement

இந்திய கிரிக்கெட் வீரர் தோனியை போல் ரன் அவுட் செய்ய முயற்சி விக்கெட் கீப்பர் ஒருவர் அசிங்கப்பட்ட சம்பவம் ஓன்று நடந்துள்ளது. பீல்டர் தூக்கி எரியும் பந்தை பின்னால் இருக்கும் ஸ்டெம்பை பார்க்கமலையே அதில் அடித்து ரன் அவுட் செய்வது தோனியின் ஸ்பெஷல்.

தோனி போன்றே இந்த வீரரும் முயற்சிக்க ஆனால் பந்து ஸ்டெம்பில் படாமல் விலகி சென்றுள்ளது. இந்தியாவில் நடைபெற்றுவரும் உள்ளூர் தொடரான சையத் முஷ்டாக் அலி டி20 டிராபி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இருக்கும் மத்தியபிரதேச அணியும், மேகாலயா அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதின.

இந்த போட்டியில் மத்தியபிரதேச அணி வீரர் அய்யர் விளையாடிக்கொண்டிருக்கையில் பந்தை பீல்டரிடம் அடித்துவிட்டு ரன் ஓடினார். பீல்டர் பந்தை தடுத்து விக்கெட் கீப்பரிடம் தூக்கி போடுகிறார். இதற்கிடையே பாதி தூரம் ஓடிவிட்ட அய்யர் தான் அவுட் ஆவது உறுதி என பொறுமையாக திரும்பி வருகிறார்.

இதற்கிடையே பீல்டர் தூக்கி போட்ட பந்தை மெதுவாக கையில் பிடித்து நேராக ஸ்டெம்பில் அடித்திருந்தாலே அய்யர் வெளியேறியிருப்பார். ஆனால், விக்கெட் கீப்பர் அந்த பந்தை பின்னால் திரும்பாமல் ஸ்டெம்பை நோக்கி தூக்கி வீச ஸ்டெம்புக்கு சம்மந்தமே இல்லாமல் அந்த பந்து செல்கிறது.

இந்த அசிங்கம் உனக்கு தேவையா என்பதுபோல பந்தை தூக்கி வீசிய பீல்டர் விக்கெட் கீப்பரை பார்த்து சிரிக்கிறார். இதோ அந்த வீடியோ.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#dhoni #cricket
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story