×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது ஏன் தெரியுமா?

Why rohit sharma elected bat first

Advertisement

2019 ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் இறுதிப்போட்டி இன்று சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. 

விறுப்பான இந்த இறுதிப்போட்டியில் வென்று நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. ரசிகர்களும் அவர்களுக்கு விருப்பமான அணிக்கு தீவிரமாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முத்லில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். தோனி போன்ற மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் எதிரனியில் இருக்கும நிலையில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய ரோகித்திற்கு நிச்சயம் தைரியம் வேண்டும். 

சென்னை கடந்த போட்டியில் டெல்லியை முதலில் பேட்டிங் செய்ய வைத்து தனது அனுபவமிக்க ஸ்பின்னர்களை கொண்டு டெல்லி அணியை திணர வைத்தது. இதை அனைத்தையும் கண்டும் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார் என்றால் அதற்கு நிச்சயம் வலிமையான காரணம் இருக்கும். 

இன்றைய போட்டி நடைபெறும் மைதானத்தில் முதல் பேட்டிங்கின் சராசரி ரன் 175 ஆகும். இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான ஒன்று தான். பேட்டிங்கில் வலிமையான மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 175 ரன்கள் எடுத்தாலே சென்னை அணிக்கு மிகப்பெரிய சவாலாக தான் இருக்கும். 

மேலும் மும்பை அணியில் தலைசிறந்த பந்துவீச்சாளர்களான பும்ரா மற்றும் மலிங்கா உள்ளனர். இருவருமே கடைசி ஓவர்களில் மிகவும் நேர்த்தியாக பந்துவீசக் கூடியவர்கள். பும்ராவின் பந்தினை சமாளிக்க தோனியே கடைசி ஆட்டத்தில் தடுமாறினார் என்பது அனைவருக்கும் தெரியும். 

இவை அனைத்தையும் மனதில் வைத்து தான் ரோகித் சர்மா துணிச்சலாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருப்பார். ரோகித்தின் இந்த துணிச்சலை முறியடிப்பாரா தோனி எனபதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#IPL 2019 #IPL 2019 Final #Rohit sharma #MS Dhoni #csk vs mi
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story