தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"எந்த போட்டியில் எந்த அணி வெல்லும்" மெக்கல்லம் வெளியிட்ட அதிர்ச்சி கருத்து கணிப்பால் இந்தியா ரசிகர்கள் உற்சாகம்

which team will win mccullam on instagram

which team will win mccullam on instagram Advertisement

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக்கோப்பை தொடரில் எந்தெந்த அணிகள் யாருடன் வெல்லும், யாருடன் தோல்வியுறும் என நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மெக்குல்லம் வெளியிட்டுள்ளார்.

நியூசிலாந்து அணியை கேப்டனாக இருந்து கடந்த 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் வழிநடத்தியவர் ப்ரெண்டன் மெக்குல்லம். கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்த மெக்குல்லம் கடந்த உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணியினை இறுதி போட்டி வரைக்கும் எடுத்து சென்றார்.

wc2019

அதிரடி ஆட்டக்காரர் மெக்குல்லம் இந்த உலகக்கோப்பை தொடரில் அணைத்து 10 அணிகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என கணித்துள்ளார். ஒவ்வொரு அணியும் எந்த அணியுடன் வெல்லும், எந்த நியூட்டன் தோல்வியுறும் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது கணிப்பின் படி, இந்த தொடரில் இந்தியா இங்கிலாந்திடமும் மற்றும் இங்கிலாந்து ஆஸ்திரேலியாவிடமும் தலா ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோல்வியுறும். மற்ற 8 ஆட்டங்களிலும் வெற்றிபெற்று இரு அணிகளும் அரை இறுதிக்கு முன்னேறும். ஆஸ்திரேலியா அணி வெஸ்ட் இண்டீஸ், இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் அணிகளிடம் தோல்வியுற்று மற்ற 6 போட்டிகளிலும் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறும்.

அதேசமயம் அரையிறுதிக்கு முன்னேறும் நான்காவது அணிக்கு போட்டி அதிகமாகும். மெக்குல்லம் கணிப்பின்படி நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் பாக்கிஸ்தான் அணிகள் தலா 5 போட்டிகளில் வெல்லும் என்றும், ரன் ரேட் அடிப்படையில் தான் அந்த நான்காவது அணி அரையிறுதிக்கு தேர்வாகும் என கணித்துள்ளார். இதில் மேலும் மழை பெய்தால் யாருக்கு சாதகம் ஆகும் என்பது அப்போது தான் தெரியும் என்று பதிவிட்டுள்ளார்.

அவரது கணிப்பில் இருக்கும் பரிதாபம் என்னவெனில் 1996 ஆம் ஆண்டில் உலகக்கோப்பையை வென்ற இலங்கை அணி இந்த தொடரில் வெஸ்ட் இண்டீசுடனும், பங்களாதேஷ் அணி இலங்கையுடன் மட்டும் தலா ஒரு போட்டியில் மட்டும் வெல்லும் என்றும் மற்ற 8 போட்டிகளிலும் தோற்கும் என்பது தான். ஆப்கானிஸ்தான் அணி இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளை வென்று 8 ஆவது இடத்தை பிடிக்கும் என மெக்குல்லம் கணித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#wc2019 #mccullam #ind vs eng #wc2019 semifinals
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story