×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காட்டு அடி அடிக்கும் வார்னர்.! இந்திய அணியை மிரளவைக்கும் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள்.!

ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பிஞ்ச் ஆகிய இருவரும் சிறப்பாக ஆடிவருகின்றனர்.

Advertisement

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. சிட்னியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
 
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி அதே சிட்னி மைதானத்தில்  பகல்-இரவு மோதலாக இன்று நடக்கிறது.  இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பிஞ்ச் ஆகிய இருவரும் சிறப்பாக ஆடிவருகின்றனர். ஆரம்பத்திலிருந்து அதிரடியாக விளையாடும் டேவிட்  வார்னர் 67 பந்துகளுக்கு 76 ரன்களுடன்(3 சிக்ஸ்ர் 6 பவுண்டரி) காட்டு அடி அடித்து ஆடிவருகிறார். ஆரோன் பிஞ்ச் 60 பந்துகளுக்கு 50 ரன்களுடன் ஆடிவருகின்றனர். ஆஸ்திரேலிய அணி 21 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 130 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#warner #india vs aus
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story