×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நாங்கள் தோற்றதற்கு இதுதான் காரணம்.! விராட் கோலி என்ன கூறியுள்ளார் தெரியுமா.?

கடைசி ஆட்டத்தில் வில்லியம்சனின் கேட்ச் வாய்ப்பை தவற விட்டதால் தோல்வி அடைந்தோம் என பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.

Advertisement

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அபுதாபியில் நேற்று முன்தினம் நடந்த நாக் அவுட் சுற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது. அந்த ஆட்டத்தில் தோல்வியடையும் அணி போட்டியை விட்டு வெளியேறும் என்ற நிலையில், அந்த ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது சன்ரைசர்ஸ் அணி. 

அந்த ஆட்டத்தின் தோல்வியால் 2020 ஐ.பி.எல் போட்டியில் இருந்து வெளியேறியாது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. அந்த ஆட்டத்தில்  44 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் ஆடி சன்ரைசர்ஸ் அணி வெற்றுக்கு முக்கிய காரணமாக இருந்த கேன் வில்லியம்சன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

அந்த ஆட்டத்தின் தோல்விக்கு பிறகு பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி பேசுகையில், நாங்கள் போதுமான ரன்கள் எடுக்கவில்லை. நாங்கள் பதட்டத்தால் ஆடியது தான் எங்களை இந்த நிலைக்கு கொண்டுசென்றது. சன்ரைசர்ஸ் அணியின் வில்லியம்சன் அவர்களின் அணி வெற்றிக்கு 16 பந்துகளில் 28 ரன்கள் தேவையாக இருந்த போது அவர் பவுண்டரி எல்லையில் தூக்கி அடித்தார். ஆனால் படிக்கல் அந்த கேட்சை மிஸ் செய்ததால் தான் நாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அந்த விக்கெட்டை அப்போது எடுத்திருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும்.

எங்கள் அணிக்கு சஹால், டிவில்லியர்ஸ் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்தநிலையில், பெங்களூரு அணியினரின் குரூப் படத்தை டுவிட்டரில் வெளியிட்டு இருக்கும் விராட்கோலி, எங்கள் ஆட்டத்தில் ஏற்றம் இறக்கம் இருந்தாலும் எங்களது பயணம் சிறப்பாகவே இருந்தது. எங்களுக்கு ஆதரவாக இருந்த எங்களது ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. உங்களது அன்பால் எங்கள் அணி வலுப்பெற்ற அணியாக உருவாகும் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#virat #rcb
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story