×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஐசிசி தரவரிசை பட்டியலில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த ஆஸ்திரேலிய வீரர்!

virat second place in icc rank list

Advertisement


ஐசிசி-யின் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணித்தலைவர் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலிய அணியின் மெஷின் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

நியூசிலாந்திற்கு எதிரான இந்தியாவின் முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணித்தலைவர் விராட் கோலி 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார், இரண்டாவது இன்னிங்சில் 43 பந்துகளில் 19 ரங்களில் அவுட் ஆக்கினார். இந்தநிலையில் விராட் கோலி தற்போது 906 புள்ளிகளுடன் டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான ஐ.சி.சி தரவரிசை பட்டியலில் யில் 2 வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.

இதற்கிடையில், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லாபூசாக்னை மிஞ்சி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 3 வது இடத்தைப் பிடித்தார். அதேபோல் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா, முகமது ஷமி ஆகியோர் புள்ளிகளை இழந்ததால், பந்து வீச்சாளர்களு்க்கான தரவரிசை பட்டியலில் முதல் 10 இடத்தில் இடம்பிடிக்கவில்லை.

765 புள்ளிகளுடன் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 9வது இடத்தைப் பிடித்தார். முதல் 10 இடங்களில் உள்ள ஒரே இந்தியராக அஸ்வின் உள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#icc #test #badsman #rank list #virat
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story