அரையிறுதி போட்டிக்கு முன்பு விராட் கோலி என்ன செய்துள்ளார் பாருங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்
Virat kohli outing with anushka before semifinal

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டியானது மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு ட்ரஃப்போர்டு மைதானத்தில் நடைபெறுகிறது.
கடந்த சனிக்கிழமை கடைசி லீக் போட்டி முடிந்தவுடன் இந்திய வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மான்செஸ்டர் நகருக்கு சென்றுவிட்டனர். அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் வெளியில் சுற்றிப் பார்க்க சென்றுள்ளார்.
அவர்கள் இருவரையும் ஜோடியாக பார்த்த ரசிகர்கள் அவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளனர். மேலும் கோலியும் தனது மனைவியுடன் சேர்ந்து செல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இலங்கையுடனான கடைசி லீக் போட்டியை அனுஷ்கா சர்மா நேரில் மைதானத்திற்கு வந்து பார்வையிட்டார்.