×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்திய கேப்டன் விராட் கோலியின் புதிய சாதனை!!!

இந்திய கேப்டன் விராட் கோலியின் புதிய சாதனை!!!

Advertisement

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் 6 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் இந்திய கேப்டன் விராத் கோலியும் இணைந்துள்ளார்.

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி, சவுதாம்டனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதிகப்பட்சமாக அந்த அணியின் சாம் கர்ரன் 78 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டையும் இஷாந்த் சர்மா, ஷமி, அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தவானும் கே.எல்.ராகுலும் களமிறங்கினர். இருவரும் முறையே, 23, 19 ரன்களில் பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து புஜாராவும் கோலியும் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

21.5 ஓவரில் ஆண்டர்சன் வீசிய பந்தை பவுண்டரிக்கு விளாசினார் விராத் கோலி. அந்த ரன்களுடன் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறாயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார். விரைவாக இந்த ரன்களை எட்டிய 2-வது இந்திய வீரர் இவர்.

இதற்கு முன்பு, சுனில் கவாஸ்கர் 65 டெஸ்ட் போட்டிகளில் 117 இன்னிங்ஸில் இந்த ரன்களை எடுத்துள்ளார். விராத் கோலி 70 டெஸ்ட் போட் டிகளில் 119 இன்னிங்ஸில் விளையாடி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இந்த ரன்களை விரைவாக சேர்த்த இரண்டாவது வீரர் இவர்.

India’s captain Virat Kohli salutes the crowd as he leaves the pitch after getting out lbw for 103 runs during the third day of the third Test cricket match between England and India at Trent Bridge in Nottingham,

சேவாக், 72 டெஸ்ட்களில், 123 இன்னிங்ஸிலும் ராகுல் டிராவிட் 73 டெஸ்ட்களில் 125 இன்னிங்ஸிலும் சச்சின் 76 டெஸ்ட்களில் 120 இன்னிங் ஸிலும் இந்த ரன்களை எடுத்துள்ளனர்.

இதற்கு முன்பு, சுனில் கவாஸ்கர் 65 டெஸ்ட் போட்டிகளில் 117 இன்னிங்ஸில் இந்த ரன்களை எடுத்துள்ளார்.

விராத் கோலி 70 டெஸ்ட் போட் டிகளில் 119 இன்னிங்ஸில் விளையாடி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இந்த ரன்களை விரைவாக சேர்த்த இரண்டாவது வீரர் இவர்.

சச்சின் டெண்டுல்கர் – 123 இன்னிங்ஸ்

கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவானும், கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்பட்டவருமான சச்சின் டெண்டுல்கர் 123 இன்னிங்ஸில் 6000 ரன்களை  கடந்ததன் மூலம் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

விரேந்திர சேவாக் – 125 இன்னிங்ஸ்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான சேவாக் 125 இன்னிங்ஸில் 6000 ரன்களை கடந்து இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.

ராகுல் டிராவிட் – 125 இன்னிங்ஸ்

முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் 125 இன்னிங்ஸில் 6000 ரன்களை கடந்து இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#indian cricket #Kohli #shewag #Sachin tendulkar #dravid
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story