விராட் கோலிக்கு என்னதான் ஆச்சு! வைரலாகும் விசித்திரமான போட்டோ
Virat kohli different pose for selfie

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மைதானத்தில் எந்த அளவிற்கு ஆக்ரோசமாக இருப்பாரோ அதற்கு எதிர்மறையாக வெளியில் எப்போதும் கேலியும் கிண்டலுமாக இருக்கக் கூடியவர்.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் டி20 தொடரில் அனைத்து போட்டிகளையும் வென்றாலும் ஒருநாள் தொடரில் 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. அடுத்ததாக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது.
இந்த 2 போட்டிகளும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான போட்டிகள் என்பதால் இரு அணிகளும் மிகுந்த தயாரிப்புடன் உள்ளனர். நேற்று முடிந்த 3 நாள் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது.
வரும் 21 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. ஓய்வு நேரங்களில் விராட் கோலி சக வீரர்களுடன் எப்படி சகஜமாக பழகுகிறார் என்பதற்கு உதாரணமாக ஒரு போட்டோவை வளெஇயிட்டுள்ளார் கோலி. முகமது சமி மற்றும் ப்ரித்திவ் ஷா இருக்கும் அந்த புகைப்படத்தில் விராட் கோலியின் முகம் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.