×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட!! 50 ரன் அடித்ததும் விராட்கோலி அப்படி ஒரு ரியாக்சன் கொடுக்க இதுதான் காரணமா!! வைரல் வீடியோ..

நேற்றைய போட்டியில் 50 ரன் அடித்ததும் விராட்கோலி கொடுத்த ரியாக்சன் வீடியோ ஒன்று இணையத்தில்

Advertisement

நேற்றைய போட்டியில் 50 ரன் அடித்ததும் விராட்கோலி கொடுத்த ரியாக்சன் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஐபில் 14 வது சீசன் T20 போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மும்பையில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எடுத்தது.

அதிகபட்சமாக ராஜஸ்தான் வீரர் சிவம் தூபே 46 ரன்களும், ராகுல் திவேட்டியா 40 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து 178 என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்கள் படிக்கல் மற்றும் கேப்டன் விராட்கோலி இருவரும் தொடக்கம் முதல் அதிரடியாக ஆடி, 16.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் அடித்து அணியை வெற்றிபெற செய்தனர்.

இதனிடையே நேற்றைய போட்டியில் தனது 50 வது ஐபில் அரைசதத்தை கடந்த விராட்கோலி, அரைசதம் அடித்த கையோடு பெவிலியனில் இருந்த தன்னுடைய அன்பு மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் மகளை நோக்கி கையசைத்து காட்டி பறக்கும் முத்தத்தை  அனுப்பினார்.

அதுமட்டும் இல்லாமல் இந்த அரைசதம் தனது அன்பு மகளுக்கு சமர்ப்பணம் என்பதுபோலிம் மைதானத்திற்குலையே செய்கை செய்து காண்பித்தார் விராட்கோலி. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#IPL 2021 #virat kholi
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story