தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இங்கிலாந்து மண்ணில் இப்படி மட்டும் இல்லையென்றால் முதல் பந்திலே அவுட் தான்.! விராட் கோலி என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.!

நியூசிலாந்திற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு இந்திய அணி தயாராக உள்ளது. இதன் இறுத

virat kholi talk about england match Advertisement

நியூசிலாந்திற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு இந்திய அணி தயாராக உள்ளது. இதன் இறுதிப் போட்டி ஜூன் 18 முதல் 22 வரை சவுத்தாம்ப்டனில் நடைபெறும். முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல இந்தியா, நியூசிலாந்து இரு அணிகளும் முனைப்பு காட்டி வருகிறது. இந்திய அணி இங்கிலாந்து சென்ற பின் தனது தனிமைப்டுத்தலை முடித்து கொண்ட பின் பயிற்சியில் ஈடுபட உள்ளது. இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்கு இந்திய அணி, இங்கிலாந்து சென்றுவிட்டது.

இந்நிலையில், இங்கிலாந்து புறப்படும் முன் விராட் கோலி, ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், இந்திய அணியை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் அது மட்டுமே எனது மனதில் உள்ளது. இந்த இங்கிலாந்து தொடரின்போது நியூசிலாந்து அணிக்கு இங்கிருக்கும் சூழல் நிச்சயம் சாதகமாக அமைய வாய்ப்புள்ளது. ஆனாலும் நியூசிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என நான் நினைக்கவில்லை.

virat

இங்கிலாந்திற்கு நாங்கள் செல்வது இது முதல் முறை கிடையாது. இங்கிலாந்து கிளைமேட் எங்களுக்கு நன்றாக தெரியும். இங்கு உள்ள சூழலை பழகிக்கொண்டு உற்சாகமான மனநிலையில் போட்டியை எதிர்கொள்ள வேண்டும். அப்படி உற்சாகமின்றி களமிறங்கினால் முதல் பந்திலேயே விக்கெட்டை இழப்பீர்கள் அல்லது பவுலராக இருந்தால் விக்கெட் வீழ்த்த தடுமாறுவீர்கள் எல்லாமே நமது மனநிலையை பொறுத்து தான். எனவே நல்ல உற்சாகமான மனநிலையுடன் போட்டியை ரசித்து விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#virat #indian cricket
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story