×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார்.? நேற்றைய போட்டியில் பேசிய விராட் கோலி.!

இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார்.! நேற்றைய போட்டியில் பேசிய விராட் கோலி.!virat

Advertisement

டி 20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் இந்தியா- நமிபியா அணிகள் நேற்று மோதியது. இந்த போட்டியில்  டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நமிபியா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. 

இதனையடுத்து133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 15.2 ஒவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 136 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் நமிபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 சுற்று லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்திடம் படுதோல்வி கண்ட இந்திய அணியின் அரையிறுதி கனவு தகர்ந்தது

இந்திய அணியின் கேப்டனாக தனது கடைசி டாஸில் பங்கேற்ற விராட் கோலி, அடுத்த டி20 கேப்டன் யார் என்பதை சூசகமாக வெளிப்படுத்தினார். நேற்று துபாயில் நமீபியா அணிக்கு எதிரான போட்டியில், இந்திய டி20 அணி கேப்டனாக தனது கடைசி டாஸில் பங்கேற்ற கோலி, டாஸை வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

டாஸின் போது பேசிய கோலி, அடுத்த இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நியமிக்க வாய்ப்பு இருப்பதாக சூசகமாக வெளிப்படுத்தினார். அதாவது, இந்திய அணியின் கேப்டனாக இருப்பது எனக்கு கிடைத்த கௌரவம், என்னால் முடிந்ததைச் செய்துள்ளேன். இப்போது இந்த அணியை முன்னோக்கி வழிநடத்துவதற்கான அடுத்த கட்டத்திற்கான நேரம் இது என்று நினைக்கிறேன். ரோகித் இருக்கிறார், அவர் சிறிது காலமாக அனைத்து விஷயங்களை கவனித்து வருகிறார் என கோலி சூசகமாக தெரிவித்தார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Captain #virat #rohit
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story