×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விஜய் தேவரகொண்டா.! அவருக்கு இப்படியொரு பிரச்சினையா?? வருத்தத்தில் ரசிகர்கள்!!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விஜய் தேவர் கொண்டா.! அவருக்கு இப்படியொரு பிரச்சினையா?? வருத்தத்தில் ரசிகர்கள்!!

Advertisement

தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. இளம் பெண்களின் கனவு நாயகனாக, சாக்லேட் பாயாக வலம் வந்த அவரது நடிப்பில் இறுதியாக வெளிவந்த படங்கள் பெருமளவில் ஹிட் ஆகவில்லை. அதாவது அவர் நடித்திருந்த லைகர், குஷி திரைப்படங்கள் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. 

 விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் 

இந்த நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டா பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் சத்யதேவ் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் கிங்டம். இப்படம் வரும் ஜூலை 31ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில் நடிகர் விஜய் தேவரகொண்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படிங்க: Video : நடிகர் விஜய் சேதுபதியின் "தலைவன் தலைவி "திரைப்படத்தின் டிரைலர் வெளியானது! இணையத்தில் வைரலாகும் வீடியோ..

 மருத்துவமனையில் அனுமதி

கிங்டம் பட பணிகளில் ஈடுபட்டு வந்த விஜய் தேவரகொண்டாவிற்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பின் தீவிர சிகிச்சைக்கு பிறகு தற்போது அவரது உடல் நலனில் முன்னேற்றம் இருப்பதாகவும், விரைவில் ரீசார்ஜ் செய்யப்படுவார் எனவும் மருத்துவர்களால் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ரெண்டு பேரையும் பிரிச்சுவிட்ருங்க.. ரசிகர்கள் கொண்டாடும் தலைவன் தலைவி ட்ரெய்லர்.! எகிறும் எதிர்பார்ப்பு!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay devarakonda #Dengue fever #Hospitalized
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story