திக்.. திக்.. நிமிடங்கள்! இறுதிப்போட்டியின் பரபரப்பை 3 நிமிட வீடியோவில் வெளியிட்ட ஐசிசி
Video of final heartbeat momemts im wc2019

இங்கிலாந்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பல்வேறு பரபரப்புக்கு இடையே பல குழப்பங்களுக்கு மத்தியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
உலகக் கோப்பை வரலாற்றில் முறையாக இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தொடர்ந்து 2 முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து அணிக்கு இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சியது.
இதுவரை எந்த இறுதிப்போட்டியிலும் நடந்திராதவாறு மிகுந்த பரபரப்பு இந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அரங்கேறியது. முதல் 50 ஓவர்களில் இரு அணிகளும் 241 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டையில் முடிந்தது. அதன் பின்னர் நடந்த சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் 15 ரன்கள் எடுத்ததால் அதுவும் டையில் முடிந்தது.
பின்னர் அதிக பவுண்டரிகள் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த பரபரப்பான இறுதிப்போட்டியின் கடைசி நிமிடங்களை வீடியோவாக வெளியிட்டுற்ளது ஐசிசி.