×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கடைசி பந்தில் அம்பயர் செய்த மிகப்பெரிய தவறு! RCB அணிக்கு ஏற்பட்ட தீராத சோகம்! குமுறிய விராட்!!

very bad luck to RCB

Advertisement

ஐபில் போட்டியின் 12 வது சீசன் ஆரம்பித்து இதுவரை ஐந்து போட்டிகள் நடைபெற்றுளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடைபெறுவரும் இந்த போட்டியானது தற்போது மேலும் சூடுபிடித்துள்ளது.

ஐபில் போட்டியின் 12 வது சீஸனின் ஏழாவது போட்டி இன்று மும்பை அணிக்கும் பெங்களூரு அணிக்கும் இடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து மும்பை அணியின் துவக்க வீரர்களான டீகாக் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். ரோகித் சர்மா 33 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து வெளியேறினார். டீகாக் 20 பந்துகளில் 23 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். 

அடுத்ததாக களமிறங்கிய யுவராஜ் சிங் சாகலின் ஓவரில் தொடர்ந்து மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டு ஹாட்ரிக் சிக்ஸ் அடித்தார். அவரின் நான்காவது பந்திலும் சிக்ஸர் அடிக்க முயற்சித்த யுவராஜ் துரதிஷ்டவசமாக அவுட் ஆகி வெளியேறினார். யுவராஜ் 12 பந்துகளில் 23  ரன்கள் எடுத்து ரசிகர்களை உற்சாக படுத்தினார். இந்தநிலையில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.

188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி ஆரம்பத்திலிருந்து நிதானமாக ஆடிவந்தது. விராட் கோலி 32 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின் களமிறங்கிய வாணவேடிக்கை நாயகன் ஏபிடி வில்லியர்ஸ் ஆதிரடியாக ஆடினார். இறுதி ஓவரை மலிங்கா வீசினார். 

கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது பெங்களூரு அணி. மலிங்காவின் சிறப்பான பந்துவீச்சால் பெங்களூரு அணி 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தநிலையில் மும்பை அணி 6  ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிபெற்றது.

ஆனால் மலிங்கா வீசிய கடைசி பந்து நோபல். அதனை நடுவர் கவனிக்கவில்லை. நடுவர் அதனை கவனித்திருந்தால் 1 பந்துக்கு 5 ரன்கள் என்ற நிலை ஏற்பட்டிருக்கும். அதுவும் ஏபிடி நிற்கவேண்டிய சூழ்நிலை என்பதால் கண்டிப்பாக சூப்பர் ஓவருக்கோ அல்லது பெங்களூரு அணி வெற்றி பெறுவதற்கோ வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால் நடுவரின் மெத்தனத்தால் ஆட்டம் பெங்களூரு அணிக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rcb #Mumbai indians #virat
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story