×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நான் இப்போதெல்லாம் பால் குடிக்கிறது இல்ல சார்! வைபவ் சூர்யவன்ஷி சொன்ன கூல் பதிலை பார்த்தீங்களா... மேடையிலேயே சிரித்த ரவி சாஸ்திரி! வைரலாகும் வீடியோ..!!!

ஐபிஎல் 2026 தொடரில் அதிரடி ஆட்டத்தால் கவனம் ஈர்த்த 15 வயது வைபவ் சூர்யவன்ஷி, 5 முக்கிய விருதுகள் மற்றும் புதிய கார் வென்று ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

Advertisement

அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியுடன் இந்த சீசன் நிறைவடைந்த நிலையில், கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் முழுவதும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மீது திரும்பியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக களமிறங்கிய அவர், இந்த சீசனில் பேட்டிங்கில் காட்டிய அதிரடி ஆட்டம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

நடப்பு தொடரில் 15 போட்டிகளில் விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதங்களுடன் மொத்தம் 776 ரன்கள் குவித்துள்ளார். 237.30 என்ற அபாரமான ஸ்டிரைக் ரேட்டுடன் அதிக ரன்கள் எடுத்த வீரராகவும் அவர் சீசனை முடித்துள்ளார்.

5 முக்கிய விருதுகள் கைப்பற்றிய இளம் வீரர்

சிறப்பான ஆட்டத்தின் பலனாக ஆரஞ்சு கேப், மோஸ்ட் வேல்யூபிள் பிளேயர் (MVP), வளர்ந்து வரும் வீரர், சூப்பர் ஸ்ட்ரைக்கர் மற்றும் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என மொத்தம் ஐந்து முக்கிய விருதுகளை வைபவ் வென்றார். இதனுடன் ரூ.55 லட்சம் மதிப்பிலான பரிசுகளும், புதிய டாடா சியரா காரும் அவருக்கு வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: 'குட்மார்னிங் கியூட்டி ' பேருந்தில் இருந்தபடியே வைபவ் சூர்யவன்சி ஜன்னல் வழியாக கொடுத்த ரியாக்ஷனை பாருங்க...! இணையத்தில் செம வைரல்!!!

ரவி சாஸ்திரியின் கேள்வி... வைபவின் கூல் பதில்!

பரிசளிப்பு விழாவின் போது முன்னாள் இந்திய கேப்டன் ரவி சாஸ்திரி, “இவ்வளவு வலிமையாக இருக்க தினமும் எவ்வளவு பால் குடிப்பே?” என்று நகைச்சுவையாகக் கேள்வி எழுப்பினார். அதற்கு சிரித்தபடியே பதிலளித்த வைபவ், “நான் இப்போதெல்லாம் பால் குடிக்கிறதே இல்லை சார்” என்று கூறினார்.

15 வயது வீரரின் இந்த எதிர்பாராத பதில் மைதானத்தில் இருந்த ரசிகர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது. அந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது.

இந்தியா 'A' அணிக்காக அடுத்த கட்டம்

ஐபிஎல் தொடரில் முத்திரை பதித்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இந்த இளம் நட்சத்திரம், ஜூன் 9 முதல் இந்தியா 'A' அணிக்காக விளையாட இலங்கை செல்ல உள்ளார். அவரது அதிரடி பேட்டிங்கும், மேடையில் வெளிப்பட்ட தன்னம்பிக்கையான பேச்சும் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

 

இதையும் படிங்க: இந்த பையன் சாதாரண ஆள் இல்ல! சீசன் ஆரம்பத்துல சிரமப்பட்டான்... இப்போ சிக்ஸர் பறக்குது! வைபவ் சூர்யவன்ஷியின் பெற்றோருக்கு அஸ்வின் கொடுத்த அந்த ஒரு அட்வைஸ்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vaibhav Suryavanshi #IPL 2026 #ராஜஸ்தான் ராயல்ஸ் #Orange Cap #இந்தியா A அணி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story