×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நங்கூரமாய் நின்ற புஜாரா!! குவியும் கிரிக்கெட் ஜாம்பவான்களின் பாராட்டுகளை பாருங்கள்

நங்கூரமாய் நின்ற புஜாரா!! குவியும் கிரிக்கெட் ஜாம்பவான்களின் பாராட்டுகளை பாருங்கள்

Advertisement

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 
இந்திய அணி 273 ரன்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய வீரர் புஜாரா சதம் அடித்து கடைசி வரையிலும் அவுட்டாகாமல் அசத்தியுள்ளார். அவரது சிறப்பான ஆட்டத்தை பார்த்து அனைவரும் புகழ்ந்து வருகின்றனர்.

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி, சவுதாம்டனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணி 76.4 ஓவரில் 246 ரன்னில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்கள் சாய்த்தார். முகமது ஷமி, இஷாந்த் சர்மா, அஸ்வின் தலா இரண்டு விக்கெட் எடுத்தனர்.

இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது. அணியின் ஸ்கோர் 37 ஆக இருந்த போது, பிராட் வேகத்தில் எல்பிடபிள்யூ ஆனார் கே.எல்.ராகுல். அவரைத் தொடர்ந்து ஷிகர் தவான் 23 ரன்னில் பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 50 ரன்களுக்கு இரண்டு விக்கெட்களை இழந்தது. இதனையடுத்து, புஜாரா உடன் கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. அதே நேரத்தில் விக்கெட்கள் விழாமல் பார்த்துக் கொண்டது. இதனால், இந்திய அணி 31 ஓவரில் 100 ரன்களை எட்டியது.

இந்நிலையில் தான் சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் விராட் கோலி, கர்ரன் பந்துவீச்சில் 46 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர், புஜாரா – ரகானே ஜோடி சற்று நேரம் நிலைத்தது. ஆனால், ரகானேவும் 11 ரன்னில் அவுட் ஆனார். ரகானேவுக்கு இந்திய அணியின் சரிவு தொடங்கியது. ரிஷப் பந்த் தொடங்கி முகமது சமி வரை அடுத்தடுத்து 4 விக்கெட்களை மொயின் அலி மின்னல் வேகத்தில் சாய்த்தார். இதனால், 200 ரன்களை எட்டுவதற்கு இந்திய அணி 8 விக்கெட்களை இழந்தது. சற்று நேரம் தாக்குப்பிடித்த இஷாந்த் சர்மா 14 ரன்னில் மொயின் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா 210 பந்துகளில் சதம் அடித்தார். இந்திய அணி 227 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்தது. பின்னர் புஜாராவுடன் சேர்ந்த பும்ராஹ் சிறிது நேரம் நிலைத்து நிற்க கடைசி விக்கெட் பார்ட்னெர்ஷிப் 46 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்திய அணி 273 ரன்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 29 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனார். அதேபோல், கடந்த போட்டியில் களக்கிய ஹர்திக் பாண்ட்யா 4 ரன்னில் நடையை கட்டினார்.

மற்ற வீரர்கள் அனைவரும் சொதப்பிய போதிலும், புஜாராவின் பொறுப்பான ஆட்டத்திற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.



 



 



 



 



 



 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cricket #eng vs ind 4th test #pujara century #wishes from sachin
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story