×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஐபில் வரலாற்றில் இதுவரை மிகவும் குறைந்த ரன் எடுத்த டாப் 5 அணிகள் மற்றும் ரன் எவ்வளவு தெரியுமா?

ஐபில் 13 வது சீசன் T20 போட்டிகள் கடந்த மாதம் 19 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

Advertisement

ஐபில் 13 வது சீசன் T20 போட்டிகள் கடந்த மாதம் 19 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

இதுவரை 32 போட்டிகள் முடிந்துள்ளநிலையில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணியும், மற்றொரு ஆட்டத்தில் சென்னை மற்றும் டெல்லி அணியும் மோதுகின்றன. புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களில் இருக்கும் அணிகள் மட்டுமே இரண்டாவது சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் அணிகளுக்கு இடையிலான போட்டி சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் இதுவரை நடந்த ஐபில் சீசனில் எந்த அணி மிகவும் மிகவும் குறைவான ரன் எடுத்துள்ளது என்பதுபற்றி பார்ப்போம்.

1 . பெங்களூரு அணி: 49/10 (9.4)
கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே கொல்கத்தா ஈடன் கார்ட்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் இரண்டாவதாக பேட்டிங் செய்த பெங்களூரு அணி 49 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2 . ராஜஸ்தான் அணி: 58/10 (15.1)
கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு  அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் இரண்டாவதாக பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 58 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் பெங்களூரு அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

3 . டெல்லி  அணி: 66/10 (13.4)
கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் தேதி டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் இரண்டாவதாக பேட்டிங் செய்த டெல்லி அணி 66 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் மும்பை அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

4 . கொல்கத்தா அணி: 67/10 (15.2)
கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதி கொல்கத்தா மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 67 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

5 . டெல்லி அணி: 67/10 (17.1)
கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த டெல்லி அணி 67 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ipl lowest scores #ipl teams lowest scores #IPL T20 2020 #IPL Points Table
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story