உலகக்கோப்பை முடிந்தால் என்ன! இதோ வந்துருச்சுல தமிழ்நாடு பிரீமியர் லீக்! எப்போ முதல் போட்டி தெரியுமா?
TNPL season 4 start date and full details

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே மாதம் 30 ஆம் தேதி தொடங்கி ஜூலை 14 ஆம் தேதி முடிவடைந்தது. நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதிய இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி அதிக பவுண்டரி முறையில் கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில் உலகக்கோப்பை போட்டிகள் முடிந்ததை அடுத்து தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் நாளை முதல் தொடங்க உள்ளது. திண்டுக்கல்லில் தொடங்கும் முதல் ஆட்டமானது திண்டுக்கல் மற்றும் சென்னை அணிகள் இடையே நடைபெறுகிறது.
ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி TNPL இறுதி போட்டி சென்னையில் உள்ள MA சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.