தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

டெல்லிக்கு எதிரான போட்டிக்கான டிக்கெட் விற்பனை..!! சேப்பாக்கத்தில் இன்று தொடக்கம்..!!

டெல்லிக்கு எதிரான போட்டிக்கான டிக்கெட் விற்பனை..!! சேப்பாக்கத்தில் இன்று தொடக்கம்..!!

The sale of tickets for the 55th league match to be held in Chennai on 10th will start today at 9.30 am. Advertisement

சென்னையில் 10 ஆம் தேதி நடைபெற உள்ள 55 வது லீக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 52 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. வரும் 10 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள 55 வது லீக் போட்டியில் சென்னை-டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்ய உள்ளதாக சென்னை அணி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கத்தில் உள்ள மைதானத்தில்  இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் உள்ள 2 கவுண்ட்டர்களில் ரூ.1,500 விலையில் விற்பனையாகும். ரூ.2,000, ரூ.2,500 ஆகிய விலைக்கான டிக்கெட்டுகளை கவுண்ட்டரிலும், PAYTM மற்றும் www.insider.in ஆகிய இணைய தளங்களிலும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும். ரூ.3,000, ரூ.5,000 ஆகிய விலைகளில் உள்ள டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமே விற்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிவிப்பில், ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுக்கு மேல் வழங்கப்படாது என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Chepauk #csk #CSK vs DC #ipl t20 #IPL 2023
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story