×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்தியாவிற்காக பதக்கம் வென்ற தமிழக விவசாயியின் மகன்!. அவரின் தாயின் கண்ணீர் மல்கும் பேட்டி!.

இந்தியாவிற்காக பதக்கம் வென்ற தமிழக விவசாயியின் மகன்!. அவரின் தாயின் கண்ணீர் மல்கும் பேட்டி!.

Advertisement


இந்தோனேஷியாவின் ஜகர்த்தா நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் தருண் அய்யாசாமி  வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

இந்தோனேஷியாவில் தற்போது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆண்களுக்கான 400 மீற்றர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தருண் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

 400 மீட்டர் தடை தாண்டும் போட்டிகளில் கத்தார் வீரர் சம்பா அப்துர்ரஹ்மான் பந்தய தொலைவை 47.66 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்ற நிலையில், இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் தருண் அய்யாசாமி 48.96 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தருண் நான்காவது படிக்கும் போதே அவரது தந்தையை இழந்தவர். அவரது சகோதரியும் தமிழ்நாடு கைப்பந்து அணியில் சேர்ந்து விளையாடி வருகிறார். இருவரையும்  மிகச் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனையாக உருவாக்கிய அவரது தாயார் பாராட்டத்தக்கவர்.

தருணின் தாயார் பூங்கொடி பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 29 வயது நிரம்பிய  தருணுக்கு சத்யா என்கிற தங்கை உள்ளார். இதனையடுத்து வெள்ளிப் பதக்கம் வென்றது குறித்து தருண் கூறுகையில்,

‘எனக்கு 8 வயதாக இருக்கும்போது தந்தை இறந்துவிட்டார். தாயார் எனக்காக நிறைய தியாகம் செய்து இருக்கிறார். அவருக்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன். தற்போது அவர் ஆசிரியையாக வேலை பார்த்து மாதத்துக்கு ரூ.14 ஆயிரம் தான் சம்பாதித்து வருகிறார். எனது தாயாருக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறேன். சிறந்த திறனை வெளிப்படுத்தி பதக்கம் வென்றதன் மூலம் அரசு வேலை கிடைக்கும் என்று நம்புகிறேன்.

என்னுடைய போட்டியாளர்கள் பற்றி சிந்திக்காமல் எனது ஓட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தினேன். எனது தேசிய சாதனை நேரத்தை விட சிறப்பான நேரத்தில் பந்தயத்தை முடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தருண் கூறுகிறார்.

மேலும் தருணின் தாயார் பூங்கொடி கூறுகையில், எனது மகன் தருண் விடா முயற்சியுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டான். எங்களை சந்திக்க வருவதை கூட குறைத்துக் கொண்டு பயிற்சி மேற்கொண்டான்.

ஆசிய விளையாட்டு போட்டிக்கு செல்லும் முன் தங்கம் எப்படியும் வென்று விடுவேன் என்று உறுதியாக கூறி சென்றான். 400 மீற்றர் தடை தாண்டுதல் ஓட்ட போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதும் மிகவும் சந்தோஷம் அடைந்தேன்.

தருணின் தீவிர பயிற்சிக்கு கிடைத்த வெற்றி இது. எனது மகனின் வெற்றியை பற்றி என்னிடம் பலரும் வாழ்த்து கூறிய போது மிகவும் சந்தோஷமாக இருந்தது’ என தெரிவித்துள்ளார்.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Dharun #silver medal #tamilnadu farmers #tamilnadu player
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story